முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
135

New Page 1

தொடங்கினாள்,’ என்கிறாள் மேல் : பேய்ச்சி முலை சுவைத்தாற்கு - தாயுங்கூட உதவாத சமயத்திலே பூதனை வந்து முலை கொடுக்க, அவ்வளவிலே உணர்த்தி உண்டாய், அவளை முடித்துத் தன்னை நோக்கித் தந்தானே! அவ்வுபகாரத்திலே தோற்று அன்று தொடங்கி இவள் பிச்சு ஏறினாள்.

    ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், 1பூத்தரு புணர்ச்சி, புனல் தருபுணர்ச்சி, களிறு தருபுணர்ச்சி என்ற இவை புணர்ச்சிக்குக் காரணங்களாம். எட்டாத கொம்பிலே நின்றதொரு பூவை ஆசைப்பட்டால், இவன் தன்னைப் பேணாதே இவள் ஆசையை முடித்துக்கொடுக்கை; ‘இவன் தன்னைப்பேணாதே நம் நினைவை முடித்தானே!’ என்று அதற்காகத் தன்னைக்கொடுக்கை பூத்தருபுணர்ச்சியாம். ஆற்றிலே அழுந்துகிற இவளைத் தான் புக்கு ஏற விட்டதற்காகத் தன்னைக் கொடுக்கை புனல் தருபுணர்ச்சியாம். தன் நினைவின்றியே யானையின் கையிலே அகப்பட்டவளை மீட்டுக் கொடுத்ததற்காகத் தன்னைக் கொடுக்கை களிறு தருபுணர்ச்சியாம். 2இங்கே இவற்றுள் ஒன்றும் அன்று; அவன் தன்னை நோக்கினதற்கு இவள் தன்னை எழுதிக்கொடுக்கிறாள்; என் பெண் கொடி - இவர்களில் வேறுபாடு, இயல்பாகவே அமைந்த பெண் தன்மையையுடையவள். ஏறிய பித்து -
இவள் கொண்ட பிச்சு.                                             

(6)

372

        ஏறிய பித்தினோடு ‘எல்லா
            உலகும்கண் ணன்படைப்பு’ என்னும்’
        நீறுசெவ் வேஇடக் காணில்,
            நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
        நாறு துழாய்மலர் காணில்,
            ‘நாரணன் கண்ணிஈது’ என்னும்;
        தேறியும் தேறாதும் மாயோன்
            திறத்தன ளேஇத் திருவே.

_________________________________________________

1. இங்கு, இறையனார் களவியல், சூத். 14. உரை காண்க.

2. ‘இங்கே இவற்றுள் ஒன்றுமன்று,’ என்றது, ‘தங்களைப் பாதுகாத்தல் முதலிய
  உபகாரத்தை நோக்கி அவர்களுக்குத் தோற்று அந்தப் பெண்கள் தங்களை
  எழுதிக்கொடுத்தார்கள்; இவள் உத்தம நாயகியாகையாலே, தலைவன்
  தன்னைத்தானே பாதுகாத்துக்கொண்டதற்குத் தான் தோற்றுத் தன்னை
  அவனுக்கு உரிமையாக்குகிறாள்,’ என்றபடி.