முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
136

New Page 1

    பொ-ரை : மிகுந்த மயக்கத்தை அடைந்திருக்கும் நிலையிலும் ‘இந்த எல்லா உலகங்களும் கண்ணபிரானுடைய படைப்பு,’ என்னா நிற்கும்; திருநீற்றினை நேரே (ஊர்த்துவபுண்டரம்) இட்டிருத்தலைக் கண்டால் ‘சர்வேசுவரனுடைய அடியார்கள்’ என்று ஓடுவாள்; வாசனை வீசுகின்ற திருத்துழாயினைக் கண்டால், ‘நாராயணனுடைய மாலை இதுவாகும்,’ என்பாள்; ஆதலால், இந்தப் பெண்ணானவள் தெளிந்த நிலையிலும் தெளியாத நிலையிலும் ஆச்சரியமான குணங்களையுடைய சர்வேசுவரனுடைய திறத்தினளே ஆவாள்.

    வி-கு : செவ்வே இடுதலாவது, மேல் நோக்கியிருக்கும்படி ஊர்த்துவபுண்டரமாக இடுதல். ‘இத்திரு, தேறியும் தேறாதும், மாயோன் திறத்தனள்,’ என்க.

    ஈடு : ஏழாம் பாட்டு. 1‘தேறின போதோடு தேறாதபோதோடு வாசி அற எப்போதும் அவன் திறம் அல்லது அறியாளே!’ என்கிறாள்.

    ஏறிய பித்தினோடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும் - இவள் பிச்சேறி இருக்கிற நிலையிலே, ‘இந்த உலகம் எல்லாம் கிருஷ்ணனாலே படைக்கப்பட்டன,’ என்பாள். 2பிராமணர் பிச்சு ஏறினாலும், ஓத்துச் சொல்லுமாறு போலே இவ்விஷயத்தில் வாசனை இருக்கிறபடி. 3இவள் பிச்சு ஏறிச் சொல்லும் வார்த்தை கேட்கைக்கு, மைத்திரேயர் முதலிய மஹரிஷிகளைப்போலே தொடர்ந்து திரிய வேண்டிக்காணும் திருத்தாயார்க்கு இருக்கிறது. 4‘எல்லா உலகங்களும் மஹாவிஷ்ணுவின்

_____________________________________________________

1. நான்காமடியைக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘மயங்கிய காலத்தில் தத்துவப் பொருளைக் கூறுதல் கூடுமோ?’ என்னும்
  வினாவிற்கு விடையாகப் ‘பிராமணர்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

3. ‘இவள் பிச்சேறிச் சொல்லும்’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து,
  ஸ்ரீபராசரபகவான், வசிஷ்ட புலஸ்தியர்களுடைய வரப்பிரசாதத்தாலே
  பரதேவதா பாரமார்த்திய ஞானத்தையடைந்து தெளிந்திருந்து கூறிய
  வார்த்தையைக் கேட்க, மைத்திரேயர் முதலிய முனிவர்கட்கு அவர் மாட்டுத்
  துவள வேண்டியிருந்தாற்போன்றிருக்கிறது, தாய்க்கும் இவள் பிச்சேறிச்
  சொல்லும் வேதாந்த ரஹஸ்யமான வார்த்தையைக் கேட்கைக்கு என்பது.
  ஆக, ‘அம்முனி புங்கவர் தெளிந்திருந்து கூறும் வார்த்தையாயிற்று, இவள்
  பிச்சேறிச் சொல்லும் வார்த்தை, என்றபடி. 

4. ‘ஸ்ரீ பராசரமுனிவர் கூறிய வார்த்தை யாது?’ என்ன, ‘எல்லா உலகங்களும்’
  என்று தொடங்கி, அதற்கு விடை அருளிச்செய்கிறார். இது, ஸ்ரீ விஷ்ணு
  புரா.
1. 1 : 32. ‘என்னாநின்றாள்’ என்றது, ‘அவர் கூறிய அவ்வார்த்தையை
  இவள் கூறுகின்றாள்,’ என்றபடி.