அவ
அவளோடு ஒக்க விகற்பிக்கலாம்படிகாணும்
இவள்படிகள்தாம் இருப்பன’ என்பாள், ‘இத்திரு’ என்கிறாள். அவளுக்கு அவன் உத்தேஸ்யன்;
இருவரும் உத்தேஸ்யரான சேர்த்தி உண்டு இவளுக்கு.
(7)
373
1திருவுடை
மன்னரைக் காணில்,
‘திருமாலைக்
கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள்
காணில்,
‘உலகுஅளந்
தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள்
எல்லாம்
கடல்வண்ணன்
கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும்
ஓவாக்
கண்ணன்
கழல்கள் விரும்புமே.
பொ-ரை :
‘செல்வத்தையுடைய அரசர்களைக் கண்டால், ‘திருமகள் கேள்வனைக் கண்டேன்,’ என்பாள்; அழகு
பொருந்திய வடிவங்களைக் கண்டால், ‘உலகத்தையெல்லாம் அளந்த திரிவிக்கிரமன்’ என்று துள்ளுவாள்;
படிமங்களையுடைய கோயில்கள் எல்லாம் ‘கடல் போன்ற நிறத்தையுடைய திருமால் கோயில்களே’ என்பாள்;
தெளிவுடையளாய்ப் பந்துக்களுக்கு அஞ்சின காலத்திலும் மயங்கின காலத்திலும் இடைவிடாமல் கண்ணபிரானுடைய
திருவடிகளையே விரும்பாநின்றாள்,’ என்றவாறு.
வி-கு :
திரு - அரசச்செல்வம். வண்ணம் - வடிவிற்கு ஆகுபெயர். கரு - படிமை. தே இல் - கோயில்; தே -
தெய்வம். வெருவுதல் - உறவினர்க்கு அஞ்சுதல். வீழ்தல் - மயக்கம்.
ஈடு :
எட்டாம் பாட்டு. 2‘மிகத்தடுமாறிய நிலையினளாய் இருந்தாலும் இவள் அவனுக்கே உரியவளாய்
இருக்கின்றாள்,’ என்கிறாள்.
திருவுடை மன்னரைக்
காணில் திருமாலைக் கண்டேனே என்னும் -குறைவற்ற ஐஸ்வரியங்களையுடைய இராசாக்களைக் காணில்,
‘திருமகள் கேள்வனை 3ஒருபடி காணப்
_____________________________________________________
1. ‘உலகபாலர் உருவாய் நின்று
உலகங்காத்தலின், ‘இறை’ என்றார் : ‘திருவுடை
மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்’
என்று பெரியாரும்
பணித்தார்,’ என்பது பரிமேலழகருரை (திருக்குறள், 39ஆம் அதிகாரம்,
இறை
மாட்சி, முன்னுரை.)
2. நான்காமடியைக் கடாக்ஷித்து,
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
3. ‘ஒருபடி
காணப்பெற்றேனே’ என்றது, ‘கண்டேன்’ என்னாது ‘கண்டேனே’
என்ற ஏகாரத்தின் பொருளை விளக்கியபடி.
|