முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
140

New Page 1

பெற்றேனே’ என்பாள். 1நாதமுனிகள், இராஜா சாமந்தன் தலையிலே அடியை இட்டு யானைக் கழுத்திலே புக்கபடியைக் கண்டு, சர்வேசுவரன் பிரமன் முதலியோர் தலையிலே அடியிட்டுப் பெரியதிருவடியை மேற்கொள்ளும்படி இதுவாகாதே!’ என்னா மோகித்தார் என்பது பிரசித்தமே அன்றோ? இராஜா தன் சேனையோடே கங்கை கொண்ட சோழபுரத்து ஏறப் போகச்செய்தே, பெரிய முதலியார் மன்னனார் திருவடிகளிலே சேவித்திருக்கச் செய்தே, பெண்பிள்ளை வந்து, ‘நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்ணுமாய் வந்து புகுந்தார்கள்,’ என்றவாறே, ‘பெருமாளும் இளைய பெருமாளும் பிராட்டியும் ஐந்திரவியாகரண பண்டிதனும்’ என்று புத்தி பண்ணிப் பின் தொடர்ந்து போய், முன்னே போகின்றவர்கள் ‘போகின்றார்கள், போகின்றார்கள்’ என்னக் கேட்டுக் கீழை வாசலிலே சென்றவாறே, ‘இப்படிப் போகின்றவர்களைக் கண்டீர்களோ?’ என்று வாசலில் அவர்களைப் பார்த்துக் கேட்க, அவர்கள் ‘கண்டிலோம்’ என்ன, அதுவே காரணமாகத் திருநாட்டிற்கு எழுந்தருளினார் அன்றோ?

    உருவுடை வண்ணங்கள் காணில் உலகு அளந்தான் என்று துள்ளும் - நீலம் குவளை காயா உருப்பெற எழுதின சித்திரம் இவற்றைக் காணில், நிறமாத்திரத்தையும் ஊனக்கண்ணுக்குத் தோன்றுகிற எளிமைத் தன்மையையும் கொண்டு, குணாகுண நிரூபணம் பண்ணாதே எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்தவன் என்று, பசுவின் அருகே கட்டி வைத்த கன்று துள்ளுமாறு போலே பரபரப்போடும் கூடிய செயல்களைப் பண்ணாநிற்கும். கருவுடைத் தே

_____________________________________________________

1. ‘திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே’ என்று
  மோஹித்ததற்கு ஐதிஹ்யம் காட்டுகிறார், ‘நாதமுனிகள்’ என்று தொடங்கி.
  ‘இராஜா சாமந்தன் தலையிலே அடியையிட்டு யானைக் கழுத்திலே
  புக்கபடியைக் கண்டு’ என்னுமிவ்விடத்தில்,

  ‘இரும்பிடி நூறு சூழ இறுவரை நின்ற தேபோல்
  கரும்பொடு காய்நெல் துற்றிக் கருப்புரக் கந்தில் நின்ற
  சுரும்புசூழ் மதத்த சூளா மணிஎனும் சூழி யானைப்
  பெருந்தகைப் பிணையல் மன்னர் முடிமிதித் தேறி னானே,’

  என்ற சிந்தாமணிச் செய்யுள் நினைவிற்கு வருகின்றது. பெரிய முதலியார் -
  ஸ்ரீமந் நாதமுனிகள். ஐந்திர வியாகரண பண்டிதன் - அனுமான்.