வ
விழுந்தார்; அவர் விழுந்ததைக்
கண்டு நின்ற குடிமகன் ஓடி வந்து அவரை எடுத்துக்கொண்டு வந்து வீட்டிலே விட்டு, ‘இவர் தன்மை அறிந்திருந்தும்
இந்நாளிலே இவரை வயல் பார்க்கப் புறப்பட விடுவார் உண்டோ?’ என்றான்.
பெரும்புலம் ஆநிரை
காணில் பிரான் உளன் என்று பின்செல்லும் -1அளவு மிகுந்து பெருத்துக் காட்சிக்கு
இனியதாய் இருக்கிற பசுநிரைகளைக் காணில், ‘என் நிலை அறிந்து வந்து உதவுகைக்காகக் கடைக்கூழையிலே
வாரா நின்றான்’ என்று அவற்றிற்குப் பின்பு ஏறப்போகாநிற்கும். அன்றிக்கே, ‘அவற்றின் திரளுக்குள்ளே
அவனையும் காணலாம்’ என்று அவற்றின் பின்னே போகா நிற்கும் என்னுதல். அரும்பெறல் பெண்ணினை
- 2ஸ்ரீராமா! தசரத சக்கரவர்த்தி செய்த மஹத்தான தவத்தாலும் மஹத்தான யாகம் முதலிய
செயல்களாலும் அவருக்குப் புத்திரன் ஆனாய்,’ என்கிறபடியே, தம்மைப் பெற்றவர்கள் பட்ட வருத்தம்
அல்லகண்டீர் நான் இவளைப் பெறுதற்குப் பட்டது; 3அடியிலே பல காலம் தவம் செய்தே
அன்றோ இவளைப் பெற்றது இவள். மாயோன் - 4‘குரவர்களாகிய தாய் தந்தையர்கள்
நம்மை என் செய்வார்கள்?’ என்கிறபடியே, பெற்றவர்களைக் கைவிடும்படி செய்ய வல்லவன். அலற்றி
அயர்ப்பிக்கின்றான் - எப்போதும் தன்னையே வாய் வெருவும்படி செய்து, அத்துணையில் நில்லாது
மயங்கும்படி பண்ணாநின்றான்.
(9)
_____________________________________________________
1. ‘பின் செல்லும்’ என்பதற்கு
இரண்டு வகையாகக் கருத்து அருளிச்செய்கிறார்:
ஒன்று, கிருஷ்ணன் பசுக்கூட்டங்கட்குப் பின்னே
வருகின்றான் என்று
நினைத்து, முன்னிடத்தில் இருக்கும் இவள் கிருஷ்ணனிருக்கும்
பின்னிடத்திற்குச்
செல்கின்றாள் என்பது. மற்றொன்று, கிருஷ்ணன் பசுக்களின்
மத்தியில் இருக்கிறான் என்று நினைத்துப்
பசுக்களின் பின்னேயே தொடர்ந்து
செல்கின்றாள் என்பது.
2. ஸ்ரீராமா. ஆரண். 66
: 3.
3. ‘அவர்களைக்காட்டிலும்
இவள் பட்ட கஷ்டம் யாது?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘அடியிலே’ என்று தொடங்கி.
‘அடியிலே’ என்றது,
சிலேடை : ‘ஆதி காலத்திலே’ என்பதும், ‘திருவடிகளிலே’ என்பதும்
பொருள்.
‘நெடுங்காலமும் கண்ணன்
நீண்மலர்ப் பாதம் பரவிப் பெற்ற,
தொடுங்காலொசியு மிடை இளமான்’ என்பது, திருவிருத்தம்,
37.
4. ஸ்ரீ விஷ்ணு புரா.
5. 6 : 27. இது,
கோபிகைகள் வார்த்தை.
|