முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
145

375

375

அயர்க்கும்;சுற் றும்பற்றி நோக்கும்;
    அகலவே நீள்நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக்கண் துளும்ப
    வெவ்வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண் ணா!’என்று பேசும்;
    ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற்பெருங் காதல்என் பேதைக்கு
    என்செய்கேன் வல்வினை யேனே?

    பொ-ரை : ‘மயங்குவாள்; பின்னர் நாற்புறத்திலும் பலகாலும் பாராநிற்பாள்; விரிந்து செல்லும்படி நீண்ட தூரம் பார்ப்பாள்; பின்னர் வியர்த்து நீராக நிற்பாள்; குளிர்ந்த கண்களில் நீர் துளும்பும்படி பெருமூச்சு எறிவாள்; தளர்வாள்; மீண்டும், ‘கண்ணபிரானே!’ என்று பேசுவாள்; ‘பெருமானே, வா!’ என்று கூவுவாள்; பெரிய காதலால் மயக்கங்கொண்ட என் பெண்ணிற்கு வல்வினையேன் என் செய்வேன்!’ என்கிறாள்.

    வி-கு : ‘அயர்க்கும், நோக்கும், கொள்ளும், வியர்க்கும், கொள்ளும், சோரும், பேசும், கூவும்’ என்பன, செய்யும்என் முற்றுகள். பேதை - பருவப்பெயர்.

    ஈடு : பத்தாம் பாட்டு. 1நிறம் முதலியவற்றால் எம்பெருமானை ஒத்திருக்கும் பொருள்களை நினைப்பதற்கு ஆற்றல் இல்லாத துன்பத்தின் மிகுதியாலே இவளுக்குப் பிறந்த வேறுபாடுகளைச் சொல்லி, ‘நான் என் செய்வேன்?’ என்கிறாள்.

    அயர்க்கும் - நின்றுகொண்டு இருக்கும்போதே சித்தத்தின் செயல் அற்று மயங்குவாள். சுற்றும் பற்றி நோக்கும் ‑ 2பின்னையும் அறிவு குடிபுகுந்து, தன் ஆபத்தே செப்பேடாக அவன் வரவை அறுதியிட்டு, வந்து அருகே நின்றானாக, ஆசையோடு சுற்றும் பாராநிற்பாள். அகலவே நீள் நோக்குக் கொள்ளும் - அங்குக் காணாமையாலே, ‘எப்படியும் இவ்வளவில் புறப்படாதொழியான்,’ என்று அவன் புறப்படுதல் தொடங்கிக் காண்கைக்காகப் பரக்கக்

_____________________________________________________

1. பாசுரம் முழுதினையும் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. அயர்த்தவள் சுற்றும் பார்த்தற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்,
  ‘பின்னையும்’ என்று தொடங்கி.