முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
147

காணும்படி மஹா பாவத்தைப் பண்ணினேன்! 1ஆழ்வான் திருக்கண்கள் நோவுபட்ட பின்பு எம்பெருமானார் திருவுள்ளம் நோவுபட்டாற்போலேகாணும் திருத்தாயார் திருவுள்ளமும் படுகிறது                             

(10)

376

வல்வினை தீர்க்கும் கண்ணனை
    வண்குரு கூர்ச்சட கோபன்
சொல்வினை யாற்சொன்ன பாடல்
    ஆயிரத் துள்இவை பத்தும்
நல்வினை என்றுகற் பார்கள்
    நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல்வினை தீரஎல் லாரும்
    தொழுதுஎழ வீற்றிருப் பாரே.

    பொ-ரை : வளப்பம் பொருந்திய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர், கொடிய வினைகளை எல்லாம் தீர்க்கின்ற கண்ணபிரான் விஷயமாகச் சொல்லியல்லாது நிற்க ஒண்ணாத பத்தி பாரவஸ்யத்தாலே சொன்ன திருப்பாசுரங்கள் ஆயிரத்துள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் புண்ணியம் என்று கற்பவர்கள், நன்மையையுடைய பரமபதத்தை அடைந்து, பழமையான வினைகள் எல்லாம் நீங்க, எல்லாரும் தொழுது எழும்படி வேறுபட்ட சிறப்போடு எழுந்தருளியிருப்பார்கள்.

_____________________________________________________

1. ‘என்செய்கேன்’ என்றதற்கு ஓர் ஐதிஹ்யம் காட்டுகிறார், ‘ஆழ்வான்’ என்று
  தொடங்கி. ஆழ்வான் - கூரத்தாழ்வான். கூரத்தாழ்வாரை ‘ஆழ்வான்’
  என்றும், நம்மாழ்வாரை ‘ஆழ்வார்’ என்றும் வழங்குதல் வைணவ மரபு.
  ‘ஆழ்வான் திருக்கண்கள் நோவுபட்ட பின்’ என்றது, கிருமிகண்ட
  சோழனாலே திருக்கண்கள் போயினமையைக் குறித்தபடி. இதன் விரிவை,
  அப்பெரியார் திவ்விய சரிதையில் காண்க.

  ‘அவத்தப்புன் சமயச்சொற் பொய்யை மெய்யென்று
      அணிமிடறு புழுத்தான்றன் அவையில் மேவிச்
  ‘சிவத்துக்கு மேற்பதக்குண்’ டென்று தீட்டும்
      திருக்கூர வேதியர்கோன் செவ்வி பாடப்
  பவத்துக்கம் பிணிநீங்க நரகந் தூரப்
      பரமபதங் குடிமலியப் பள்ளி கொள்ளும்
  நவத்துப்புச் செங்கனிவாய்க் கரிய மேனி
      நம்பெருமாள் அரங்கேசர் ஆடி ரூசல்.’

  என்றார் திவ்விய கவியும்.