முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
156

படியாக ஆயிற்று இருப்பது. ‘ஏழ் உலகு’ என்று பரமபதமும் அதற்குக் கீழே உள்ள உலகங்களுமான இரு வகை உலகங்களையும் சொல்லிற்றாதல்; பரமபதத்திற்கு இப்பால் உள்ள உலகங்கள் மாத்திரத்தைச் சொல்லிற்றாதல். இரு வகையான உலகங்களையும் சொல்லும் போது 1மூன்று வகையான ஆத்துமாக்களையும் நான்கு வகையான பிரகிருதியையும் சொல்லுகிறது.  நான்கு வகையான பிரகிருதிகளாவன : காரிய காரண உருவமான இரு வகைப்பட்ட பிரிவுகள் அங்கு; இங்கும், அப்படியுண்டான இரு வகைப்பட்ட பிரிவுகள். லீலாவிபூதி மாத்திரத்தைச் சொன்னபோது, கீழேயுள்ள உலகங்களையும் பூமியையும் கூட்டி ஒன்று ஆக்கி, பரமபதத்திற்கு இப்பாலுள்ள உலகங்களை ஆறு ஆக்கி, ஆக ஏழையும் சொல்லுகிறது என்று கொள்க. வீவு இல் சீர் -அழிவில்லாத கல்யாண குணங்களைச் சொல்லுதல்; நித்தியமான பரமபதத்தைச் சொல்லுதல். ஆக, ‘ஏழ் உலகு’ என்பதற்கு உபயவிபூதிகளையும் என்று பொருள் கொண்டால், ‘இங்கு வீவில்சீர்’ என்பதற்குக் கல்யாண குணங்கள் என்ற பொருளும், அங்கே, லீலாவிபூதியை மாத்திரம் கொண்டால், இங்கு நித்தியவிபூதி என்ற பொருளும் கோடல் வேண்டும் என்பதனைத் தெரிவித்தபடி.

    ‘இப்படி உபயவிபூதிகளையுமுடையவனான செருக்கால் தன் பக்கல் சிலர்க்குக் கிட்ட ஒண்ணாதபடி இருப்பானோ?’ என்னில், ‘அங்ஙனம் இரான்’ என்கிறார் மேல் : ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் - 2‘ஸ்ரீராமபிரான் இராச்சியத்தை விநயத்தோடு கூடினவராய் நடத்துகையாலே இராச்சியத்தை உபாசித்தார்’ என்பது போன்று ‘செருக்கு அற்றவனாய்

_____________________________________________________

1. மூன்று விதமான ஆத்துமாக்கள் : பத்தர், முத்தர், நித்தியர் என்பவர்கள்.
  ‘காரிய காரண உருவமான இருவகைப்பட்ட பிரிவுகள் அங்கு’ என்றது,
  விமான கோபுரம் முதலானவைகள் காரியம்; திவ்ய அசித்துக் காரணம்
  என்றபடி. ‘இங்கும், அப்படி யுண்டான இருவகைப்பட்ட பிரிவுகள்’ என்றது,
  இவ்வுலகத்திலும், பிரகிருதியையும் அதன் காரியமான மகத்து முதலான
  காரியங்களையும் குறித்தபடி. இரண்டாம் பத்து. பக். 35. காண்க.

      மேல் உலகம் ஆறாவன : புவர் லோகம், சுவர் லோகம், மகர்லோகம்,
  ஜனர்லோகம், தபோலோகம், சத்தியலோகம் என்பனவாம்.

2. ஸ்ரீராமா. பா. 1 : 97.