இன
இனி, ‘வெம் மா
பிளந்தான்றன்னை’ என்பதற்கு, ‘ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் யார்?’ என்றால், இன்னான் என்கிறது
என்று அம்மங்கி அம்மாள் நிர்வஹிப்பர். கேசி பட்டுப்போகச் செய்தேயும் தம் வயிறு
எரித்தலாலே ‘வெம்மா’ என்கிறார் இவர். 1‘நன்றாகத் திறந்த வாயையுடையவனும்
மஹாபயங்கரமானவனுமான அந்தக் கேசி என்னும் அசுரன், இடியினாலே தள்ளப்பட்ட மரம் போலே கண்ணபிரானுடைய
திருக்கையாலே இரண்டு கூறு ஆக்கப்பட்டவனாய்க் கீழே விழுந்தான்,’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம்.
கேசி வாயை அங்காந்துகொண்டு வந்த போது, சிறு குழந்தைகள் துவாரம் கண்ட இடங்களிலே கையை
நீட்டுமாறு போலே, இவன் பேதைமையாலே அதன் வாயிலே கையை நீட்டினான்; முன்பு இல்லாதது ஒன்றைக்
கண்ட காட்சியாலே கை பூரித்துக் கொடுத்தது; கையைத் திரும்ப வாங்கினான்; அவன் இருபிளவாய்
விழுந்தான் என்பது.
போற்றி -
2சொரூபத்திற்குத் தக்கனவாய் அன்றோ பரிவுகள் இருப்பன? 3கேசி பட்டுப்போகச்செய்தேயும்
சமகாலத்திற்போலே வயிறு எரிந்து படுகிறாராயிற்று இவர். என்றே - 4‘நம’ என்று
வாயால் எப்பொழுதும் சொல்லிக்கொண்டு இருக்கும் தன்மை வாய்ந்தவர்களாய் இருப்பார்கள்,’ என்பது
போன்று, ஒருகால், ‘பல்லாண்டு’ என்றால், பின்னையும் ‘பல்லாண்டு பல்லாண்டு’ என்னுமத்தனை. கைகள்
ஆரத் தொழுது - ‘வைகுந்தம் என்று கைகாட்டும்’ என்று வெற்று ஆகாசத்தைப் பற்றித் தொழுத கைகளின்
விடாய் தீர்ந்து வயிறு நிறையும்படி தொழுது. சொல் மாலைகள் - வாடாத மாலைகள். என்றது,
‘அநசூயை கொடுத்த மாலை போலே செவ்வி அழியாத
_____________________________________________________
1. ஸ்ரீவிஷ்ணு புரா.
5. 16 : 7.
2. ‘‘நூறு பிராயம் புகுவீர்’
என்று சொல்லாமல், ‘போற்றி’ என்கிறது என்?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘சொரூபத்திற்கு’
என்று தொடங்கி.
என்றது, ‘சேஷத்துவத்திற்கு அநுகுணமாகப் பரிந்து, ‘போற்றி’ என்று
மங்களாசாசனம்
செய்கிறார்’ என்றபடி.
3. மேலே ‘கேசி பட்டுப்போகச்செய்தேயும்’
என்ற வாக்கியத்தின் விவரணம்,
‘கேசி பட்டுப்போகச் செய்தேயும்’ என்று தொடங்குவது.
4. நாராயணீயம்.
|