முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
16

மத

மதிப்புடையவர், தம் தலையிலே ஒருவன் அடி இட்டால் ‘நாம் இவன் தலையிலே அடி இட்டோம்’ என்று நினைக்க வேண்டாதபடி சிறிய துகளாய்ப் போவர்கள்’ என்றபடி.

    ஆதலின் - பொருளின் உண்மை நிலை இதுவான பின்பு. நொக்கு என - சடக்கு என. கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமின் - 1முடி கொடுத்தால் மாலையும் கொடுக்க வேண்டுமே! திருமேனியின் பரிசத்தால் நாட்செல்ல நாட்செல்ல வாசனை ஏறி வாரா நின்றுள்ள திருத்துழாய் மாலையைத் திருமுடியிலேயுடையனாய் அடியார்கட்கு எளியவனான கிருஷ்ணன் திருவடிகளை நினைக்கப் பாருங்கோள். 2‘நினைத்தல் மாத்திரம் போதியதாமோ? துதிசெய்தல் வேண்டாவோ?’ எனின், நினைத்த மாத்திரத்தில் கொண்டு முழுகுமே அன்றோ திருவடிகளின் இனிமை? அன்றிக்கே, ‘இவ்வடியை நினைக்கவே சமுசாரம் அடி அறும்’, என்னுதல். என்றது, 3‘யமன், கையில் பாசத்தைத் தரித்த தன்னுடைய கிங்கரனைப் பார்த்து, ‘பகவானிடத்தில் பத்தியுள்ளவர்களை விட்டுவிடு; நான் மற்றையோர்க்கே எஜமானன்;

_____________________________________________________

1. ‘முடி கொடுத்தால்’ என்று தொடங்கும் வாக்கியம், ரசோக்தி. ‘மேல்
  திருப்பாசுரத்தில் முடி கொடுத்தமை சொல்லிற்று. இங்கு மாலை
  கொடுத்தமை சொல்லுகிறது’ என்றபடி. ‘செம்மின் முடித் திருமாலை’
  என்றதன்றோ மேல் திருப்பாசுரத்தில்?

2. ‘நினைமினோ’ என்பதற்கு இரண்டு வகையில் கருத்து அருளிச் செய்கிறார்:
  முதலது, இனிமையிலே நோக்கு; இரண்டாவது, விரோதி அழிவதிலே
  நோக்கு.

3. ஸ்ரீ விஷ்ணு புரா. 3. 71 : 14. இங்கே,

  ‘திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்
  மறந்தும் புறந்தொழா மாந்தர் - இறைஞ்சியும்
  சாதுவாராய்ப் போதுமின்கள் என்றான் நமனுந்தன்
  தூதுவரைக் கூவிச் செவிக்கு.’

(நான்முகன் திரு. 68)

  ‘காவலில் புலனை வைத்துக் கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
  நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே
  மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ!நின் நாமங் கற்ற
  ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே!’

(திருமாலை. 1)

  என்னும் திருப்பாசுரங்களை அநுசந்திக்கத் தகும்.