பல
பல்லாண்டே அன்றோ?’
‘இது எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்னில், எழுமையுமே - 1முடிய நிற்குமவற்றை எவ்வேழாகச்
சொல்லக்கடவதன்றோ? 2‘கீழே பத்துப் பிறவியையும் தன்னையும் பரிசுத்தப்படுத்துகிறது’
என்றும், ‘மூவேழ் தலைமுறையைக் கரை ஏற்றுகிறது’ என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது அன்றே?
(1)
378
மையகண் ணாள்மலர்
மேல்உறை
வாள்உறை
மார்பினன்
செய்யகோ லத்தடங்
கண்ணன்விண்
ணோர்பெரு
மான்தனை
மொய்யசொல்
லால்இசை
மாலைகள்
ஏத்தி உள்ளப்பெற்றேன்
வெய்யநோய்
கள்முழு தும்வியன்
ஞாலத்து
வீயவே.
பொ-ரை :
‘மையணிந்த கண்களையுடையவளும் தாமரை மலரில் வசிப்பவளுமான பெரிய பிராட்டி நித்திய வாசம் செய்கின்ற
மார்பையுடையவனும், செந்நிறம் பொருந்திய அழகிய விசாலமான திருக்
_____________________________________________________
1. ‘எழுமையும்’ என்பதற்கு, எல்லாக்காலமும்
என்று பொருள் கூறத் திருவுள்ளம்
பற்றி, ‘அதற்கு அச்சொல் அப்பொருளைக் காட்டுமோ?’ என்ற சங்கையைத்
திருவுளத்தே கொண்டு விடை அருளிச்செய்கிறார், ‘முடிய நிற்குமவற்றை’
என்று தொடங்கி.
‘ஒருநாள் எழுநாள்போற்
செல்லும்சேட் சென்றார்
வருநாள்வைத் தேங்கு
பவர்க்கு.
(குறள், 1269)
என்றவிடத்து, ‘எழுநாள்’ என்பது,
பல நாள்கள் என்ற பொருளில்
வந்துள்ளமை காண்க.
2. ‘பனை நிழல்
போலே ஒருவரை மாத்திரம் நோக்கிக்கொண்ட அளவேயோ?’
என்ற சங்கையிலே வேறும் ஒரு பொருள்
அருளிச்செய்கிறார், ‘கீழே பத்துப்
பிறவியையும்’ என்று தொடங்கி. என்றது, ‘ஏழேழ் தலைமுறைக்கும்
குறை
இல்லை,’ என்றபடி. இது, போதாயன தர்மம். ‘மூவேழ் தலைமுறையை’
என்று தொடங்கும்
பொருளையுடைய சுலோகம், பாரதம். இது
தருமபுத்திரனைப் பார்த்து வீடுமன் கூறியது.
|