New Page 1
சோபை அது; சௌகுமார்யம்
இது. உறை மார்பினன் - பூவிலும் கூசி அடியிடுமவள் பொருந்தி வசிக்கும் மார்வு படைத்தவன்.
‘ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் பெருமாளைக் கை பிடித்த பின்பு ஸ்ரீ மிதிலையை நினையாதது போன்று,
இவளும் இவன் மார்வில் இனிமை அறிந்த பின்பு தாமரையை நினையாதவள்’ என்பார், ‘உறை
மார்பினன்’ என்கிறார். 1‘மக்களின் அண்மையில் இருக்கிற தன் சரீரத்தை முத்தன்
நினைப்பது இல்லை,’ என்கிறபடியே, முத்தர்கள் இல்லறவாழ்வினை நினையாதது போன்று இவளும் தாமரை
மலரை நினையாதபடி.
செய்ய கோலத்
தடம் கண்ணன் - சிவந்து காட்சிக்கு இனியனவாய்ப் பரப்பையுடையனவான திருக்கண்களையுடையவன்.
2ஓர் இடத்திலே மேகம் மழை பெய்யாநின்றால் அவ்விடம் குளிர்ந்திருக்குமாறு
போலே, ‘மைப்படி மேனி’ என்கிறபடியே, சர்வேசுவரனுடைய கரிய மேனியை ஒருபடியே பார்த்துக்கொண்டிருப்பாளே
அன்றோ இவள்? இவள் திருக்கண்களிலே அவன் திருமேனியின் நிறம் ஊறி இவள் மைய கண்ணாளாயிருக்கும்;
3‘செய்யாள் திருமார்வினில் சேர்திருமால்’ என்கிறபடியே, மார்பில் இருக்கின்ற
அவளை ஒருபடியே பார்த்துக்கொண்டிருக்கையாலே அவள் திருமேனியில் சிவப்பு ஊறி இவன் தாமரைக் கண்ணனாய்
இருக்கும்; 4‘இருவர் படியும் இருவர் கண்களிலே காணலாம்; அவன் படி இவள் கண்களிலே
காணலாம்; இவள் படி அவன் கண்களிலே காணலாம். இவர்களுடைய கண் கலவி இருக்கும்படியிறே இது.
_____________________________________________________
1. தாமரை மலரை நினையாமைக்கு
மற்றும் ஒரு திருஷ்டாந்தம் காட்டுகிறார்,
‘மக்களின்’ என்று தொடங்கி. இது, சாந்தோக்கிய
உப. 8. 12 : 3.
2. ‘மைய கண்ணாள்’ என்றதனைக்
கடாக்ஷித்து, இவள் மைய
கண்ணாளாகைக்கும், அவன் செய்ய கோலத் தடங்கண்ணானாகைக்கும்
ஏதுவை
அருளிச்செய்கிறார், ‘ஓர் இடத்திலே’ என்று தொடங்கி. அவன்
திருமேனி கறுத்திருக்கும் என்பதற்குப்
பிரமாணம், ‘மைப்படி மேனி’ என்பது.
இது, திருவிருத்தம், 94.
3. பிராட்டியின் திருமேனி
சிவந்திருப்பதற்குப் பிரமாணம், ‘செய்யாள்
திருமார்வினில்’ என்பது. இது, திருவாய்மொழி,
9. 4 : 1.
4. ‘இருவர் படியும்’ என்றது, சிலேடையாய் மேலே கூறியதற்கு விவரணமாய்
அமைந்தது. ‘இருவர் படி’ என்றதனை
விரிக்கிறார், ‘அவன்படி’ என்று
தொடங்கி. படி - திருமேனியும், தன்மையும்.
|