முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
167

379

379

வீவுஇல்இன் பம்மிக எல்லை நிகழ்ந்தநம் அச்சுதன்
வீவுஇல்சீ ரன்மலர்க் கண்ணன்விண் ணோர்பெரு மான்றனை
வீவுஇல்கா லம்இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்;
வீவுஇல்இன் பம்மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.

    பொ-ரை : ‘நித்தியமான இன்பத்தினது மிக்க எல்லையிலே தங்கியிருக்கின்ற நம் அச்சுதனும், அழிவில்லாத கல்யாண குணங்களையுடையவனும், தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையவனும்.  நித்திய சூரிகளுக்குத் தலைவனுமான சர்வேசுவரனை ஒழிவில்லாத காலமெல்லாம் இசை பொருந்திய பாமாலைகளால் துதித்துக் கிட்டப்பெற்றேன்; அவ்வாறு அவனைக் கிட்டியதனால், முடிவில்லாத மிக்க இன்பத்தினது எல்லையையுடையவன் ஆனேன்,’ என்கிறார்.

    வி-கு : ‘மிக’ என்பது, ‘மிக்க’ என்ற சொல்லின் விகாரம். ‘மேவி வீவில் மிக்க இன்ப எல்லை(யிலே) நிகழ்ந்தனன்,’ என மாறுக.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘எல்லா நற்குணங்களையும் உடையனாய் உபயவிபூதிகளையும் உடையனான சர்வேசுவரனைக் கிட்டிக் கவி பாடுகையாலே, அவனுடைய ஆனந்தத்தையும் விளாக்குலை கொள்ளும்படியான ஆனந்தத்தையுடையன் ஆனேன்,’ என்கிறார்.

    வீவு இல் இன்பம் - அழிவு இன்றிக்கே இருப்பதான ஆனந்தம். ‘அதுதான் எவ்வளவு போதும்?’ என்னில், மிக எல்லை நிகழ்ந்த - ‘இனி, இதற்கு அவ்வருகு இல்லை’ என்னும்படியான 2எல்லையிலே இருக்கிற. நம் -3ஆனந்த

_____________________________________________________

1. ‘எல்லா நற்குணங்களையுமுடையனாய் உபய விபூதிகளையுமுடையனான
  சர்வேசுவரன்’ என்றது, ‘வீவில் சீரன்,’ ‘விண்ணோர் பெருமான்’ என்ற
  தொடர்களைத் திருவுள்ளம் பற்றி. ஈசுவரனுடைய ஆனந்தத்தைச் சொல்லி
  ‘மிக எல்லை நிகழ்ந்தனன்’ என்று தம்முடைய ஆனந்தத்தைச்
  சொல்லுகையாலே, ‘அவனுடைய ஆனந்தத்தையும் விளாக்குலை
  கொள்ளும்படியான’ என்கிறார்.

2. ‘எல்லையிலே இருக்கிற’ என்றது, ‘அழிவு இன்றிக்கே இருக்கிற
  ஆனந்தத்தினது முடிந்த எல்லையிலே இருக்கிற அச்சுதன்’ என்றபடி. ஆக
  முதலடியால், ‘உலகத்தாரின் ஆனந்தங்கள் அற்பமாயும்
  அளவிற்குட்பட்டனவாயும் இருப்பனவேயாம்’ என்பதனையும், ‘அவை
  முதலான தோஷங்களில்லை இறைவனுடைய ஆனந்தத்திற்கு’ என்பதனையும்
  தெரிவித்தபடி.

3. ‘ஆனந்தவல்லியிற்பிரசித்தி’ என்றது, ‘யதோ வாசோ நிவர்த்தந்தே’ என்ற
  வாக்கியத்தைத் திருவுள்ளம் பற்றி.