முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
173

உண

உண்டு போமித்தனை போக்கி, அது பேச்சுக்கு நிலம் அன்று என்பார், ‘யான் அறியேன்’ என்கிறார். அன்றிக்கே, ‘செய்த நன்றியை அறிதலும் அவனது,’ என்கிறார் என்னலுமாம்.1

(4)

381

ஆற்றநல் லவகை காட்டும்அம் மானை அமரர்தம்
ஏற்றைஎல் லாப்பொரு ளும்விரித் தானைஎம் மான்றனை
மாற்றமா லைபுனைந்து ஏத்திநா ளும்மகிழ்வு எய்தினேன்;
காற்றின்முன் னம்கடு கிவினை நோய்கள் கரியவே.

    பொ-ரை : ‘பொறுக்கப்பொறுக்க அனுபவிப்பதற்கு நல்ல வகையைக் காட்டுகின்ற அம்மானை, நித்தியசூரிகளுக்குத் தலைவனை, எல்லாப் பொருள்களையும் பகவத்கீதை மூலமாக விரித்தவனை, எனக்குத் தலைவனை, வினைகளும் நோய்களும் காற்றிற்கு முன்னே விரைந்து சென்று கரிந்து போகும்படியாக, சொற்களாலே மாலை புனைந்து ஏத்தி எப்பொழுதும் மகிழ்ச்சியுடையவன் ஆனேன்,’ என்கிறார்.

    வி-கு : ‘வினைகளும் நோய்களும் காற்றின் முன்னம் கடுகிக் கரிய, எம்மானை மாற்றம் மாலை புனைந்து ஏத்தி, நாளும் மகிழ்வு எய்தினேன்,’ எனக் கூட்டுக, ‘கடுகிக்கரிய, புனைந்து ஏத்தி, மகிழ்வு எய்தினேன்,’ என்க.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 2‘தான் எல்லார்க்கும் தலைவனாய் இருந்து வைத்து அருச்சுனனுக்கு எல்லாப் பொருள்களையும் பொறுக்கப்பொறுக்க அருளிச்செய்தாற்போலே, எனக்குத் தன் படிகளைக் காட்ட, கண்டு அனுபவித்து, நான் என்னுடைய தடைகள் எல்லாம் போம்படி திருவாய்மொழி பாடி, எல்லை அற்ற ஆனந்தத்தையுடையவன் ஆனேன்,’ என்கிறார்.

    ஆற்ற - அமைய : பொறுக்கப் பொறுக்க என்றது, 3குளப்படியிலே கடலை மடுத்தாற்போலேயன்றிக்கே,

_____________________________________________________

1. ‘யான் அறியேன்’ என்பதற்கு இரண்டு கருத்து அருளிச்செய்கிறார்: ஒன்று,
  ‘அந்தத் தன்மையினை யான் சொல்ல அறியேன்,’ என்பது; மற்றொன்று,
  ‘அறிந்தாலும், ‘செய்த ஆற்றை’ என்று செய்த உபகாரத்தை நினைக்கச்
  செய்ய நீ அறியவேண்டுமதொழிய  நான் அறியேன்,’ என்பது.

2. ‘அமரர்தம் ஏற்றை, ஆற்ற, காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள்,
  மாற்ற மாலை புனைந்து’ என்பனவற்றைத் திருவுள்ளம் பற்றி, அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

3. குளம்பு அடி - குளப்படி. ‘மிகச்சிறிய பள்ளத்திலே’ என்பது கருத்து.