|
தட
தட்டு இல்லை அன்றோ?
‘மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்’ என்னக் கடவதன்றோ? 1இவர்
மநோரதத்திலே நின்றுபோலேகாணும் அருளிச் செய்தது.
மாற்றம் மாலை
புனைந்து ஏத்தி - சொன்மாலையைத் தொடுத்து ஏத்தி. என்றது, அவன் செய்த உபகாரத்திலே தோற்று
ஏத்தினார்; அது திருவாய்மொழியாய்த் தலைக்கட்டிற்று,’ என்றபடி. மாற்றம் - சொல். நாளும்
மகிழ்வு எய்தினேன் - அழிவு இல்லாத ஆனந்தத்தையுடையவன் ஆனேன். எய்துகை - கிட்டுகை. ‘இப்படிப்
பெரிய பேற்றினைப் பெற்றீராகில், விரோதிகள் கதி என்ன ஆயிற்று?’ எனின், காற்றின் முன்னம்
கடுகி வினை நோய்கள் கரியவே - வினைகளும் வினைகளின் பயனான பிறவியும், காற்றினைக்காட்டிலும்
விரைந்து எரிந்து சாம்பல் ஆயின. 2புதுப்புடைவை அழுக்குக் கழற்றுமாறு போலே, கிரமத்தாலே
போக்க வேண்டுவது தானே போக்கிக் கொள்ளப் பார்க்குமன்றே அன்றோ? அவன் போக்கும் அன்று
அவனுக்கு அருமை இல்லையே? 3‘வினைப்படலம் விள்ள விழித்து’ என்கிறபடியே, ஒருகால்
பார்த்துவிட அமையுமே? 4‘பாப ரூபமான கர்மத்தினுடைய கூட்டங்கள், மேருமலை மந்தர
மலை இவைகளைப்போன்று உயர்ந்திருந்தாலும், வைத்தியனைக் கிட்டிக் கெட்ட வியாதி
_____________________________________________________
1. ‘உபதேசித்தது திருத்தேர்த்தட்டிலேயாயிருக்க,
‘விட்டுசித்தர் கேட்டிருப்பர்’
என்னுதல் கூடுமோ?’ என்ன, சிலேடையாக அதற்கு விடை
அருளிச்செய்கிறார்,
‘இவர் மநோரதத்திலே’ என்று தொடங்கி. இவர் -
பெரியாழ்வார். இவர்க்குப் பலிக்கையாலே
‘இவர் மநோரதத்திலே
நின்றுபோலேகாணும்’ என்கிறார். ‘அருச்சுனனுக்குப் பலியாமையாலே அவன்
இரதத்திலே அன்றுபோலே’ என்பது.
2. ‘இவை ஒரே காலத்தில்
சாம்பலாகக் கூடுமோ?’ என்ன, ‘புதுப்புடைவை’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
3. பெரிய திருவந்,
76.
4. அதற்குப்
பிரமாணம் காட்டுகிறார், ‘பாபரூபமான’ என்று தொடங்கி. இது,
விஷ்ணு தர்மம், அத் .
78. அதற்கே, மற்றும் ஒரு பிரமாணங்காட்டுகிறார்,
‘வானோ மறிகடலோ’ என்று. இது, பெரிய திருவந்.
54.
|