அனுபவ
அனுபவிக்கின்றவர்களுடைய
அளவில் நில்லாது அனுபவிக்கப்படுகின்ற பொருள் மிக்கு இருக்கிறபடி.
அன்றிக்கே,
1‘கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும் பெரிய கோலம் தடம் கண்ணன்’ என்பதற்கு,
‘திருமேனியில் கறுத்த நிறத்தாலே வந்த அழகுக்கு மேலே அதற்குப் பரபாகமான திருக்கண்களிலே அஞ்சனத்தை
இடுகின்ற’ என்னலுமாம். இனி, ‘கரி’ என்று யானையாய், அத்தால் நினைக்கிறது குவலயாபீடமாய், குவலயாபீடமானது,
அம்மேனி மிசை - அழகிய திருமேனியிலே, வெளிய - சீற. ‘நீறு சிறிதே இடும் - பொடியாக்கும்’
என்றார் ஒரு தமிழ்ப்புலவர். விண்ணோர் பெருமான் - ‘இக் கண்ணழகை அனுபவிக்கின்றவர்கள்
நித்தியசூரிகள்’ என்பார், அதனையடுத்து ‘விண்ணோர் பெருமான்’ என்கிறார். ‘பரமபதத்திலுள்ளார்
அடைய அனுபவியாநின்றாலும், அனுபவித்த பாகம் குறைந்து அனுபவிக்கவேண்டிய பாகம்
விஞ்சியிருக்கும்’ என்பார், ‘பெருமான்’ என்கிறார்.
2உரிய
சொல்லால் - அவயவ சோபை அது; அனுபவிக்கின்றவர்கள் அவர்கள்; இப்படியிருந்தால், ‘நாம்
பாடுகிற கவிக்கு இது விஷயம் அன்று’ என்று மீளுதல் அன்றோ தக்கது? இப்படி இருக்கச்செய்தேயும்,
இவ்விஷயத்திற்கு நேரே வாசகமான சொற்களாலே. இசை மாலைகள் -3‘கேட்பதற்கு இனியனவான
வார்த்தைகள்’ என்கிறபடியே, திருச்செவி சார்த்தலாம்படி இருக்கை. ஏத்தி உள்ளப்பெற்றேற்கு -
ஏத்தி அனுபவிக்கப்பெற்ற
_____________________________________________________
1. ‘கரிய மேனிமிசை’ என்பதற்கு,
மூன்று வகையான பொருள்
அருளிச்செய்யப்படுகிறது. முதற்பொருளில், ‘கரிய மேனிமிசை’ என்பது,
திருக்கண்களுக்கு
அடை; இரண்டாவது பொருளில், திருமேனியைக்
காட்டுகிறது; மூன்றாவது பொருளில், பதங்களையே வேறு
வகையாகப்
பிரித்துப் பொருள் கோடல் வேண்டும். கரி, அம், மேனி மிசை’ என்று
பிரித்தல் வேண்டும்.
பரபாகம் - பல நிறங்கள் கலத்தலால் உண்டாகும்
சோபை.
2. ‘துதி செய்வதற்குத்
தமக்குத் தகுதியில்லை என்றவர், ‘உரிய சொல்லால்’
என்றல் கூடுமோ?’ என்ன, ‘தம்மைப் பார்த்தால்
கூடாது; அவன் அடியாக
வந்ததாகையாலே விரோதம் இல்லை’ என்று அருளிச்செய்வர் பெரியோர்.
3. ஸ்ரீ
ராமா. சுந். 31 : 1.
|