முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
180

எனக

எனக்கு. அரியது உண்டோ - 1அடையாதது அடைய வேண்டியதாய் இருப்பது யாதொன்றுமில்லை,’ என்கிறபடியே, ‘இதற்கு முன்பு அடையாததாய் இனி எனக்கு அடையப்படுவது ஒன்று உண்டோ? எனக்கு - ‘ஈசுவரன் நான்’ என்று இருக்கிற இவ்வுலகத்திலே அடிமை இனிக்கப்பெற்று, சொரூபத்திற்குத் தகுதியாக வாசிகமான அடிமை செய்யப்பெற்று, ‘வினை நோய்கள் கரிய’ என்கிறபடியே, விரோதிகள் கழியப்பெற்று இருக்கிற எனக்கு. இன்று தொட்டும் இனி என்றுமே -அடிமையில் இழிந்த இன்று தொடங்கி இனி மேல் உள்ள காலம் எல்லாம் அரியது இல்லை. 2பின்னர் அவன் பயம் இல்லாதவன் ஆகிறான்,’ என்பது உபநிடதம். 3பின்பு ‘தீர்ப்பாரை யாம்இனி’ என்ற திருவாய்மொழியாவது அறியாமலே அன்றோ இவர் இவ்வார்த்தை சொல்லுகிறது?

(6)

383

என்றும் ஒன்றுஆகி ஒத்தாரும்
    மிக்கார் களும்தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா
    உலகும் உடையான்றனைக்
குன்றம் ஒன்றால் மழைகாத்த
    பிரானைச் சொன்மாலைகள்
நன்று சூட்டும் விதிஎய் தினம்
    என்னகுறை நமக்கே?

    பொ-ரை : ‘எக்காலத்திலும் தன்னுடைய எல்லாப் படிகளுக்கும் ஒத்தவர்கள் இல்லை என்கையேயன்றித் தன்னுடைய சௌலப்ய குணத்துக்கு ஒத்தவர்களும் மிக்கவர்களும் இல்லாமலே நின்றவனும், எல்லாவுலகங்களையுமுடையவனும், மழையினால் துன்புறாதபடி பசுக்களையும் ஆயர்களையும் கோவர்த்தனம் என்னும் ஒரு மலையினால் காத்த உபகாரகனுமான சர்வேசுவரனுக்குச் சொன்மாலைகளைப் பெரிதாகச் சூட்டுவதற்குத் தக்கவாறு அவனுடைய கிருபையைப் பெற்றோம்; ஆதலால், நமக்கு இனி என்ன குறை? ஒரு குறையும் இல்லை,’ என்றபடி.

_____________________________________________________

1. ஸ்ரீகீதை. 3 : 22.

2. தைத்திரீய உப. 7.

3. ‘மேலே ‘தீர்ப்பாரை யாம்’ என்ற திருவாய்மொழியாய் இருக்க, ‘இனி
  என்றுமே’ என்பது என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பின்பு’
  என்று தொடங்கி.