New Page 1
முன்னரும்? என்ன குறை
நமக்கே - 1‘சீற்றத்திற்கு’ இலக்கு ஆகாதே அவன் கிருபைக்கு விஷயமான நமக்கு ஒரு
குறை உண்டோ? நமக்கு ஒரு குறை உண்டாகையாவது, பகவானுடைய கிருபையை அளவிற்கு உட்படுத்துகையேயன்றோ?
2‘ஸ
:- பாதுகாவலே சொரூபமாக இருக்குமவர், தம் - தீய செயலிலே முதிர நின்ற அவனை, நிபதிதம் பூமௌ
- தெய்வத் தன்மையாலே பூமியிலே கால் வையாதவன் போக்கற்றுத் தரையிலே வந்து விழுந்தான்; அன்றிக்கே,
குழந்தை தீம்பு செய்தால் தந்தை தண்டிக்கத் தொடர்ந்தால், தாயின் காலிலே விழுமாறு போலேகாணும்,
இவன் பூமியிலே விழுந்தது. சரண்ய :- ஏதேனும் தசையிலும் சரணமாகப் பற்றுதற்குத் தகுந்தவர்.
சரணாகதம் - கண்வட்டத்தில் வேறு கதியில்லாமை தோன்ற விழுந்துள்ளவனை. வதார்ஹமபி -
பெருமாள் சித்தாந்தத்தாலும் கொல்லுதற்கு உரியவனே; ஆனாலும், காகுத்ஸ்த : - குடிப்பிறப்பால்
வந்த நீர்மையாலே பாதுகாத்தார். 3‘குடிப்பிறப்பு, தண்டிக்கத் தகுந்தவரைத் தண்டித்தற்குக்
காரணமாய் இராதோ?’ என்னில், கிருபயா - ‘நாம் தொடங்கின கார்யம் பிரபலமான கர்மத்தாலே
முடிக்க ஒண்ணாததைப் போன்று, அவரும் கிருபைக்குப் பரதந்திரப்பட்டவர் ஆகையாலே நினைத்த
காரியத்தை முடிக்கமாட்டார். அவன் கிருபை விளையும் பூமியைப் பற்றியவன் ஆனான்; அதற்கு மேலே
கிருபையும் விளிந்தது; இனி, அவர் எவ்வழியாலே தண்டிப்பார்? ஆகையாலே, எனக்குக் குறை உண்டாகையாவது,
பகவானுடைய கிருபை அளவிற்குட்பட்ட விஷயமாக அன்றோ?’ என்கிறார்.
(7)
_____________________________________________________
1. குறை இல்லாமையை எதிர்மறை
முகத்தால் விளக்குகிறார், ‘சீற்றத்திற்கு’
என்று தொடங்கி.
2. கருணையை இறைவனால்
கடக்க முடியாது என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார், ‘ஸ:’ என்று தொடங்கி. இது, ஸ்ரீ ராமா.
சுந். சர்க்கம். 38.
இது திருவடியை நோக்கிய பிராட்டியின் வார்த்தை.
3. ‘குடிபுறங் காத்தோம்பிக்
குற்றங் கடிதல்
வடுவன்று; வேந்தன் தொழில்.’
‘கொலையிற் கொடியாரை
வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.’
என்பன திருக்குறள்.
|