முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
184

384

384

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத் தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?

    பொ-ரை : ‘தன் திருவடிகளை இன்று வந்து பற்றிய நமக்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பெரிய பிராட்டியார்க்கும் இனியனானவனும், பூலோகத்திலுள்ளவர்கட்கும் நித்தியசூரிகட்கும் தலைவனும், குளிர்ந்த தாமரை மலராலே சுமக்கப்படுகின்ற திருவடிகளையுடைய பெருமானுமான சர்வேசுவரனைச் சொல் மாலைகள் சொல்லும்படியாகத் தரிக்க வல்ல எனக்குப் பரமபதத்திலேயுள்ள நித்தியசூரிகளுக்குள் இனி ஒப்பாவார் யாவர்?’ என்கிறார்.

    வி-கு : ‘நமக்கும்’ என்ற உம்மை, இழிவு சிறப்பு. ‘தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமான்’ என்ற இவ்விடத்து, ‘மலர்மிசை ஏகினான்’ என்ற திருக்குறளை நினைவுகூர்க. ‘அமைக்க வல்லேன்’ என்றது, தரித்திருந்து பாடும்படியைத் தெரிவித்தபடி. ‘யாவர்’ என்ற வினா, இன்மைப்பொருளைக் குறித்து நின்றது. வானம் - இடவாகு பெயர்.

    ஈடு : எட்டாம் பாட்டு. 1எம்பெருமானுக்குத் தம் பக்கல் உண்டான அன்பின் மிகுதியை நினைத்து, ‘அவனுடைய உபய விபூதிகளை உடையனாம் தன்மைக்கும் மிருதுத் தன்மைக்கும் தகுதியாகக் கவி சொல்ல வல்ல எனக்குப் பரமபதத்திலும் ஒப்பு இல்லை,’ என்கிறார்.

    நமக்கும் - இன்று தன் திருவடிகளைப் பற்றிய நமக்கும். அன்றிக்கே, பிறந்து இறந்து பிறிவிகளிலே உழன்று திரிகின்றவர்கட்கும் இவ்வருகாயிருக்கிற நமக்கும்; 2‘நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன்’ என்றாரே அன்றோ தம்மை? பூவின்மிசை நங்கைக்கும் - நித்திய சூரிகளுக்கும் அவ்வருகாய், ரூப குணத்தாலும் ஆத்தும குணத்தாலும் நிறைந்திருக்கிற பெரிய பிராட்டியார்க்கும். மலரில் மணத்தை வகுத்தாற்போலே இருந்துள்ள மிருதுத்தன்மையையும்

_____________________________________________________

1. பிராட்டிக்கு முன்னே தம்மை அருளிச்செய்வதற்குக் கருத்தை
  அருளிச்செய்யாநின்றுகொண்டு, ‘ஞாலத்தார்’ என்றது முதல் மேல்
  உள்ளனவற்றையெல்லாம் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. திருவாய்.  3. 3 : 4.