வ
வானத்தவர்க்கும்
பெருமானை - இப்படி நெடுவாசிபட்ட விஷயங்களிலே சினேகம் ஒத்திருக்கைக்கு அடி, சம்பந்தம் இரண்டு
இடத்தில் உள்ளாரோடும் ஒத்திருப்பினும், 1இவர் படுக்கைப் பற்றில் உள்ளவராகையாலே.
அன்றிக்கே, ‘அவன் இறைவனான நிலையும் இத்தலை பரதந்திரமான நிலையும் ஒத்திருக்கையாலே’ என்னுதல்.
அன்றிக்கே, ‘தாய் தந்தையர்கள் குழந்தைகளில் குறைவாளர் பக்கலிலேயன்றோ இரங்குவது? அதனாலே,
சமுசாரிகள் முற்பட வேண்டுகிறது,’ என்னுதல். 2அந்தப் பரம பதமும் உண்டாயிருக்கவே
அன்றோ, ‘அந்தப் பரமாத்துமா உயிர்க்கூட்டம் எல்லாம் பிரிகிருதியில் லயப்பட்டுக் கிடந்த
அக்காலத்தில் தான் தனியாய் இருந்து சந்தோஷத்தை அடையவில்லை,’ என்கிறது?
தண் தாமரை
சுமக்கும் பாதப்பெருமானை - குளிர்ந்த தாமரைத் தவிசினாலே தரிக்கப்பட்ட திருவடிகளையுடைய
பெருமானை. குளிர்த்தியாலும் பரிமளத்தாலும் செவ்வியாலும் தாமரை திருவடிகளுக்குத் தோற்றுச்
சுமக்கிறாப் போலே ஆயிற்று இருக்கிறது; ஆதலின், ‘தாமரை சுமக்கும் பாதம்’ என்கிறது.
‘தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா’ என்றது அன்றோ முன்பும்? பெருமான் - எல்லார்க்கும்
தலைவன். சொல் மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு - அவனுடைய உபய விபூதிகளை உடைமையால்
வந்த ஐசுவரியத்துக்கும் மிருதுத்தன்மைக்கும் தகுதியாம்படியான கவி பாட வல்ல எனக்கு. இதற்கு,
3‘சர்வேசுவரன்,
_________________________________________________
1. ‘படுக்கைப்பற்று’ என்றது,
‘ஞாலம்’ என்று பூமியாய், அதனாலே, ஸ்ரீ
பூமிப்பிராட்டியைச் சொல்லிற்றாய், இது அவளுடைய விபூதியாகையாலே
இதனைப் ‘படுக்கைப்பற்று’ என்கிறார் என்றபடி. படுக்கைப் பற்று - சீதனம்.
2. குறைவாளர் பக்கலிலே
முற்பட இரங்குவதற்கு நியாமகம் காட்டுகிறார்,
‘அந்தப் பரமபதமும்’ என்று தொடங்கி. ‘அந்தப்
பரமாத்துமா’ என்று
தொடங்கும் பொருளையுடைய சுலோகம், மஹோபநிடதம்.
3.
முன்புள்ள முதலிகள் நிர்வாஹத்துக்குக் கருத்து, ‘ஆசு கவியாகக் கவி
சொல்லிச் சமைக்க வல்லேனான
எனக்கு’ என்பது. பட்டர் நிர்வாஹத்திற்குக்
கருத்து, ‘தரித்து நின்று சொல்ல வல்லேனான எனக்கு’
என்பது.
‘என்னாகியே’ என்ற பாசுரம், திருவாய். 7. 9 : 4. ‘உடைகுலைப்படாதே’
என்றது
‘பரவசப்படாமல்’ என்றபடி.
|