New Page 1
முகமாகக் கையைக் கூப்பிக்கொண்டு
கடலை நோக்கிச் சயனித்தார்,’ என்கிறபடியே, கிடந்த கிடையிலே இலங்கை குடி வாங்கும்படியாக,
ஒரு கடல் ஒரு கடலோடே சீறிக் கிடந்தாற்போலே கடற்கரையிலே கிடந்தபடியைத் தெரிவித்தவாறு.
நின்றும் - 1‘கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராமபிரானைத்
தாரையானவள் கண்டாள்,’ என்கிறபடியே, நின்ற நிலை. கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் -
2‘பர்ணசாலையில் எழுந்தருளியிருப்பவரும் சடை மரவுரி இவற்றைத் தரித்தவருமான ஸ்ரீ ராமபிரானை
ஸ்ரீ பரதாழ்வான் பார்த்தார்,’ என்கிறபடியே, இருந்த இருப்பாதல்; 3க்ஷத்திரியர்களுக்குரிய
ஒப்பனையோடே பதினோராயிரம் ஆண்டு இருந்த இருப்பாதல். மணம் கூடியும் - பதினோராயிரம் ஆண்டு
தன் 4படுக்கைப் பற்றான பூமியைக் காப்பாற்றுகையாலே ஸ்ரீ பூமிப்பிராட்டி அணைக்க,
அவளோடே கலந்தும்.
கண்ட ஆற்றால் உலகு
தனதே என நின்றான் தன்னை - பிரமாணங்கொண்டு அறிய வேண்டாமல், தொன்று தொட்டு வருகின்ற
அனுபவம் கொண்டு, ‘இவனுக்கே உரிமை’ என்று அறியலாய் இருக்கை; என்றது, 5ஒருவன் ஒரு
நிலத்தைத் திருத்துவது கமுகு வைப்பது எரு இடுவதாய்க் கிருஷி பண்ணாநின்றால், ‘இது இவனது’ என்று
அறியலாமே அன்றோ?’ 6‘பெய்த
காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே,’ என்னக் கடவதன்றோ?
வண் தமிழ் நூற்க நோற்றேன் - திருவாய்மொழி பாடுகைக்குப் பாக்கியம் செய்தேன். தன்னைச்
சொன்ன மாத்திரத்தில் எல்லாப் பலன்களையும் கொடுக்கக் கூடியதான உதார
_____________________________________________________
1. ஸ்ரீராமா. கிஷ். 19 : 25.
2. ஸ்ரீராமா. அயோத். 99
: 25.
3. ‘க்ஷத்திரியர்களுக்குரிய ஒப்பனை’
என்றது, முடி முதலானவற்றை. ஒப்பனை -
அலங்காரம்.
4. படுக்கைப்பற்று - சீதனம்.
5. உலகு அவனுக்கு உரியது என்பதற்கு
லௌகிக திருஷ்டாந்தம் காட்டுகிறார்
‘ஒருவன்’ என்று தொடங்கி. ஒற்றி நிலத்தில் கமுகு வைக்கமாட்டார்கள்;
ஆகையாலே, அதனையே திருஷ்டாந்தமாக எடுக்கிறார்.
6. ‘ஆனால், இது அவனுடைய
உத்தியான வனமோ?’ என்ன, ‘ஆம்’ என்று
அதற்கு மேற்கோள் காட்டுகிறார், ‘பெய்த காவு’ என்று
தொடங்கி. இது,
திருவாய். 6. 3 : 5.
|