முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
194

New Page 1

குணத்ததாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது. அன்றிக்கே. 1‘இது முன்னே நடந்ததாயிருந்தாலும் இப்பொழுது நேரிற்கண்டது போல இருக்கின்றது,’ என்பது போன்று, பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே விளக்கமாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது என்னுதல். 2‘கண்டவாற்றால்’ என்று நேரில் பார்ப்பதாய் இருக்கிறதே அன்றோ? அடி யார்க்கு இன்பமாரியே - சர்வேசுவரனைக் கவி பாடப் பெற்ற இதுவேயோ? இது, வைஷ்ணவர்களுக்கு ஆனந்தத்தை உண்டாக்கக் கூடியதாகவும் ஆயிற்று. இன்பத்தையுண்டாக்கும் மேகம் ஆதலின், ‘இன்பமாரி’ என்கிறது. 3‘இது எனக்கு இருக்கிறபடி கண்டால், இது உகக்குமவர்களுக்கு எங்ஙனே இருக்கிறதோ!’ என்கை. 4‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்,’ என்றாரே அன்றோ?

(10) 

387

மாரி மாறாத தண்அம் மலைவேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில்சூழ் குருகூர்நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல்ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினைதீர்க்குமே.

    பொ-ரை : ‘மழை மாறாமல் இருந்துகொண்டிருக்கின்ற குளிர்ந்த அழகிய திருமலையில் எழுந்தருளியிருக்கின்ற திருவேங்கடமுடையானை, வருவாய் மாறாமல் இருக்கின்ற பசுமையான பூக்கள் நிறைந்த சோலைகளாற்

_____________________________________________________

1. ஸ்ரீராமா. பால. 4 : 7. இது, குசலவர்கள் கானம் செய்யும் போது
  கேட்டிருந்த முனிவர்களெல்லாரும் மனங்களித்துக் கூறியது.

2. இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே விளக்கமாய் இருத்தற்குக்
  காரணம் காட்டுகிறார், ‘கண்டவாற்றால்’ என்று. அதாவது, ‘அறிந்தவாற்றால்’
  என்னாமல், ‘கண்டவாற்றால்’ என்றதனால், இதுவும் பிரத்தியக்ஷமாய்
  இருக்கிறது என்பது கருத்து. ஆக, ‘கண்டவாற்றால்’ என்பதனைக்
  கண்டவாற்றால் வண்தமிழ்’ என்று ‘வண்தமிழ்க்கும்’ அடையாகக்
  கூட்டிக்கோடல் வேண்டும் என்பது.

3. ‘அவர்களுக்கு இன்பமாரியாய் இருத்தலை இவர் அறிந்தவாறு யாங்ஙனம்?’
  என்னும் வினாவிற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இது எனக்கு’ என்று
  தொடங்கி.

4. அவர்கள் விரும்புவதற்கு மேற்கோள் காட்டுகிறார், ‘தொண்டர்க்கு’ என்று
  தொடங்கி. இது, திருவாய். 9. 4 : 9.