பதத
பதத்தின் பொருள்
சொல்லப்பட்டது: இப்பாசுரத்தில் ‘அஹம்’ என்ற பதத்தின் பொருள் சொல்லப்படுகிறது.1
(4)
337
பணிமின் திருவருள் என்னும்அம்
சீதப்பைம் பூம்பள்ளி
அணிமென் குழலார் இன்பக்
கலவி அமுதுஉண்டார்
துணிமுன்பு நாலப் பல்ஏழையர்
தாம்இழிப்பச் செல்வர்
மணிமின்னு மேனிநம் மாயவன்
பேர்சொல்லி வாழ்மினோ.
பொ-ரை :
‘திருவருள் புரிதல் வேண்டும் என்று கூறுகின்ற அழகிய மிருதுவான கூந்தலையுடைய பெண்களோடு அழகிய
குளிர்ந்த பரந்த பூக்களாலான படுக்கையிலே சேர்க்கையால் உண்டான இன்பமாகிய அமுதை உண்டவர்கள்,
அந்நிலை கெட்டு, துணி முன்னே தொங்கவும் பெண்டிர் பலர் இழித்துக் கூறவும் செல்லுவார்கள்; ஆதலால்,
நீலமணி போன்று பிரகாசிக்கின்ற திருமேனியையுடைய நம் மாயவனது திருநாமத்தைச் சொல்லி
வாழுங்கோள்,’ என்கிறார்.
வி-கு :
‘என்னும் குழலாரோடு பூம்பள்ளியிலே இன்ப அமுது உண்டார்’ என்க. உண்டார் - பெயர். ‘உண்டார்
செல்வர்’ என முடிக்க. ‘நால இழிப்பச் செல்வர்’ என்க. செல்வர் - முற்று. இப்பாசுரத்திற்குப்
பட்டர் அருளிச்செய்யும் வியாக்கியானம் இன்பச் சுவையிலே தோய்ந்தது; நவில்தொறும் இன்பம்
பயப்பது. ‘அம் சீதம் பைம்பூம்பள்ளியிலே கிடக்கும் அணி மென்குழலாரைப் பார்த்துத் ‘திருவருள்
பணிமின்’ என்னும் இன்ப அமுது உண்டார்’
_____________________________________________________
1. ‘கையும் உழவுகோலும்,
பிடித்த சிறுவாய்க் கயிறும், சேநாதூளி தூசரிதமான
திருக்குழலும் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய்
நிற்கிற சாரத்ய
வேஷத்தை ‘மாம்’ என்று காட்டுகிறான்.
(சூத். 218.)
2. ‘சர்வஜ்ஞனாய்,
சர்வசக்தியாய், பிராப்தனான நான்’, ‘கீழ் நின்ற நிலையும்,
மேல் போக்கடி அறிகைக்கும் அறிந்தபடியே
செய்து தலைக் கட்டுகைக்கும்
ஏகாந்தமான குண விசேஷங்களையும், தன் பேறாகச் செய்து
தலைக்கட்டுகைக்கு
ஈடான பந்த விசேஷத்தையும் காட்டுகிறது,’ ‘தனக்காகக்
கொண்ட சாரத்ய வேஷத்தை அவனையிட்டுப்
பாராதே தன்னையிட்டுப்
பார்த்து, அஞ்சின அச்சந்தீரத் தன்மையை ‘அஹம்’ என்று காட்டுகிறான்,’
என்பன ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் ஸ்ரீ சூக்திகள்;
(முமுக்ஷூப்படி,244, 245, 246.)
|