ந
நீக்கிப் பாதுகாத்தல்
அமையும்,’ என்று வழியல்லா வழியிலே இழிந்தார்கள்; அப்படிக் கலங்கப் பண்ணுமே அன்றோ அன்பு?
1‘முதியவர்களும் இளையவர்களுமான பெண்கள் காலையிலும் மாலையிலும் கூடிக்கொண்டு,
கீர்த்தியையுடைய ஸ்ரீராமபிரானுடைய நன்மைக்காக எல்லாத் தேவர்களையும் வணங்குகிறார்கள்,’ என்கிறபடியே
செய்தார்களே அன்றோ திருவயோத்தியிலுள்ளார்?
இதனைக் கண்ட உயிர்த்தோழியானவள்,
‘இவர்கள் செய்கிற இவை, இவள் அகவாயில் கிடக்கிற உயிரையும் இழக்கப் பண்ணுமித்தனை; இனி,
நாம் இத்தை அறிந்தோமாகச் சொல்லில், ‘உன் காவற்சோர்வாலே வந்ததன்றோ?’ என்று
சொல்லுவார்கள்; நாம் கைவாங்கி இருந்தோமாகில், இவளை இழக்க வரும்; இனி, இதற்குப்
போக்கடி என்?’ என்று விசாரித்து, ‘இவர்கள்தாமும் ‘இதுதான் யாதோ?’ என்று ஆராயாநின்றார்களேயன்றோ?
அதைப்போன்று நாமும் ஆராய்வதிலே இழிந்து இவள் தன்மையைக் கொண்டு சொன்னோமாகச்
சொல்லுவோம்,’ என்று பார்த்து, ‘நீங்கள் இவளுக்கு ஓடுகிற நோவும் அறிந்திலீர்கோள்; நிதானமும்
அறிந்திலீர்கோள்; பரிஹாரமும் அறிந்திலீர்கோள்; நீங்கள் பரிஹாரமாகச் செய்கிறவை,
கருமுகை மாலையைச் செவ்வி பெறுத்த என்று நெருப்பிலே இடுவாரைப்போலே இவளை இழக்கைக்குக் காரணமாமித்தனை;
ஆன பின்னர், இவற்றை விட்டு, இக்குடியிலே பழையதாகச் செய்துபோரும் பரிஹாரத்தைச் செய்யப்
பாருங்கோள்; 3‘உலகேழுமுண்டான் சொன்மொழி மாலை
_____________________________________________________
1. ‘இப்படிக் கலங்குகைக்குக்
காரணம் என்?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘அப்படி’ என்று தொடங்கி.
2. ‘அப்படிப் பரிவாலே
கலங்கின பேர் உளரோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘முதியவர்களும்’ என்று தொடங்கி.
இது, ஸ்ரீராமா.
அயோத். 2 : 52. இங்கு,
‘ஏழைய ரனைவரும் இவர்தட முலைதோய்
கேழ்கிளர் மதுகையர்
கிளைகளு மினையார்
வாழிய எனவவர்
மனனுறு கடவுள்
தாழ்குவர் கவுசலை
தயரதன் எனவே.’
என்ற கம்பராமாயணச் செய்யுளை ஒப்பு
நோக்குக.
3.
‘பழையதாகச் செய்து போரும் பரிஹாரம் யாது?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார்,
‘உலகேழும்’ என்று தொடங்கி. இது, திருவிருத்தம், 20.
‘தண்ணந்துழாய்’ என்ற பாசுரம்,
திருவிருத்தம், 53.
|