388
388
தீர்ப்பாரை
யாம்இனி எங்ஙனம்
நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால்இவ்
வொண்ணுதல் உற்றநல்
நோய்இது தேறினோம்;
போர்ப்பாகு தான்செய்துஅன்று
ஐவரை
வெல்வித்த
மாயப்போர்த்
தேர்ப்பாக
னார்க்குஇவள் சிந்தை
துழாஅய்த்
திசைக்கின்றதே.
பொ-ரை :
‘அன்னைமீர்! இந்நோயினைத் தீர்ப்பதற்குரியவர்களை இனிமேல் யாம் எங்ஙனே தேடுவோம்? ஓர்ப்பாலே,
இந்தப் பிரகாசம் பொருந்திய நெற்றியையுடைய பெண்ணானவள் அடைந்த நல்ல நோயினது தன்மை இது
என்று தெளிந்தோம்; போருக்குரிய காரியங்களையெல்லாம் தானே செய்து, அக்காலத்தில் பஞ்சபாண்டவர்களை
வெல்லும்படி செய்த மாயப்போர்த் தேர்ப்பாகனார் விஷயத்தில் இவள் மனமானது கலங்கி மயங்குகின்றது,’
என்க.
வி-கு :
‘அன்னைமீர்! யாம் இனித் தீர்ப்பாரை எங்ஙனம் நாடுதும்? ஓர்ப்பால் தேறினோம், இவ்வொண்ணுதல்
உற்ற இது நல்நோய்; தேர்ப்பாகனாருக்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றது,’ எனக் கூட்டுக.
ஓர்ப்பு - ஆராய்ந்து உணர்தல். பாகு - பகுதி. மாயம் - வஞ்சனை. தேர்ப்பாகன் - பார்த்தசாரதி;
கிருஷ்ணன். துழாஅய் - வினையெச்சம். இப்பத்துத் திருப்பாசுரங்களும் ‘வெறி விலக்கு’
என்னும் துறையின்பாற்படும்.
இத்திருவாய்மொழி
கலி நிலைத்துறை.
ஈடு :
முதற்பாட்டு. 1தோழியானவள், இவள் நோய்க்கு நிதானத்தைச் சொல்லி, ‘நீங்கள்
செய்கிறவை பரிகாரம் அல்ல,’ என்று விலக்குகிறாள்.
_____________________________________________________
1. பாசுரத்தின் ஈற்றடியையும்
முதலடியையும் திருவுள்ளம் பற்றி அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
|