முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
209

New Page 1

முயற்சி செய்வது? 1அப்படியிருக்க, இந்நோய் கொள்ளுகை அன்றிக்கே, பரிஹாரம் சொல்ல இருப்பதே நான்! ஞானம் பிறந்த பின்பு சரீரம் முடியும் வரையிலும் செல்லத் 2 தேகயாத்திரைக்கு உறுப்பாய், பின்பு தானே அழிவில்லாத பலமான நோய் அன்றோ இது? 3 இதர சாதனமாக நோக்குமிடத்துச் சாதனமாய், சாதன புத்தி கழிந்த அன்று தானே பலமாக இருக்குமே அன்றோ? 4‘சிலாக்கியமான ஆபத்தை அடைந்தவனாய்’ என்கிறபடியே, அடிக்கழஞ்சு பெற்ற ஆபத்தாயிற்று; இடர்ப்பட்ட இடத்திலே சர்வேசுவரன் அரை குலைய வந்து விழும்படியான ஆபத்தாயிற்று இது. 5‘என்னிடத்திலேயே வைக்கப்பட்ட பத்தியினாலே, உண்மையாக அறிவதற்கும் பார்ப்பதற்கும் என்னுடைய சொரூபத்தை அடைவதற்கும் தகுந்தவனாய் இருக்கின்றேன்,’ என்கிறபடியே, இது உண்டானால், பின்னை அவன் கைப்பட்டானேயன்றோ? 6இருடிகள் கோஷ்டியில் கலக்கம் அரிதாய் இருக்குமாறுபோலே; இவர்கள் கோஷ்டியில் தெளிவு அரிதாய் ஆயிற்று இருப்பது; ஆதலின்,

_____________________________________________________

1. தோழியினுடைய மனோபாவம், ‘அப்படியிருக்க’ என்று தொடங்கும்
  வாக்கியம்.

2. ‘தேக யாத்திரைக்குறுப்பாய்’ என்றது, ‘அனுபவத்திற்கு, அதாவது
  தரித்திருப்பதற்கு, உறுப்பாய்’ என்றபடி.

3. ‘தேக யாத்திரைக்கு உறுப்பு என்கிறது என்? சாதனத்துவம் இல்லையோ?’
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இதர சாதனமாக’ என்று
  தொடங்கி. ‘இதர சாதனம்’ என்றது, ‘பிரபத்திக்கு வேறான சாதனமாக
  எண்ணும்பொழுது’ என்றபடி.

4. ‘நல்நோய்’ என்பதற்குச் சிலாக்கியமான நோய்; அதாவது பத்தி என்பதற்குப்
  பிரமாணம் காட்டுகிறார், ‘சிலாக்கியமான ஆபத்து’ என்று தொடங்கி.

5. ‘பத்தி சிலாக்கியம்’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
  ‘என்னிடத்திலேயே’ என்று தொடங்கி. இது, ஸ்ரீ கீதை. 11 : 54.

6. ‘‘உற்ற நன்னோய் இது’ என்ன அமைந்திருக்க, ‘தேறினோம்’ என்கிறது
  என்?’ என்ன, இதனால், ‘இந்தத் தோற்றந்தானும் அரிது’ என்பது
  போதருகின்றது’ என்கிறார், ‘இருடிகள்’ என்று தொடங்கி. இவர்கள் -
  ஆழ்வார்கள். பகவத் பாகவத விஷயங்களில் பத்தியின் மிகுதியாலே,
  எல்லாத் தேவர்களையும் வணங்குதலாகிற வழியல்லா வழியேயாகிலும்
  நடக்கப் பார்க்குமவர்களாகையாலே, ‘இதர விஷயங்கள் ஆகா என்னும்
  தெளிவு அரிது’ என்றபடி.