என
என்றும், கலவி இன்ப
அமுது உண்டார்’ என்றும் தனித்தனியே கூட்டிப் பொருள் காணல் வேண்டும் என்பது அப்பெரியார் திருவுள்ளம்.
இதனை வியாக்கியானத்தில் காணலாகும்.
ஈடு :
ஐந்தாம் பாட்டு. 1‘செல்வ நிலையைப் போன்றே மகளிருடைய சேர்க்கையும் நிலை அற்றது,’
என்கிறார்.
‘பணிமின் திருவருள்
என்னும் அணி மென் குழலார்’ என்று 2முன்புள்ள முதலிகள் நிர்வஹிப்பர்கள்;
இவர்கள் நிர்வாஹத்தில் ‘என்னும்’ என்னும் எச்சம் ‘குழலார்’ என்னும் பெயருக்கு அடைமொழி.
பட்டர், அங்ஙன் அன்றிக்கே, ‘திருவருள் பணிமின் என்னும்’ என்னும் இதனை ‘இன்பக்
கலவி அமுது உண்டார்’ என்றதனோடே சேர்த்து அருளிச் செய்வர். பணிமின் திருவருள் என்னும் - தான்
இராச்சியத்தை அவர்களுக்குப் 3படுக்கைப்பற்று ஆக்கி, அவர்களைப் படுக்கையிலே வைத்துத்
தான் தாழ நின்று ‘திருவுள்ளத்தில் கிடக்கிறதை அருளிச்செய்யலாகாதோ?’ என்னும்; 4தன்னைத்
தொழுது வணங்குகின்றவர்கள் புறம்பே உண்டே? இனி. இன்பச் சுவையாவது, தான் இவர்களுக்குத் தாழ நிற்கையே
அன்றோ? அம் சீதம்
_____________________________________________________
1. மேலே போந்த
பாசுரங்களில் கூறிய பொருளைத் தளமாக்கிக் கொண்டு,
‘அணி மென்குழலார் இன்பக் கலவி அமுது உண்டார்’
என்பது
போன்றவைகளைக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘பணிமின் திருவருள்’
என்பதற்கு இரு வகையான நிர்வாஹங்கள்
கூறப்படுகின்றன : ஒன்று, முன்புள்ள முதலிகள் நிர்வாஹம்;
இவர்கள்
நிர்வாகத்திலே, ‘திருவருள் புரிய வேண்டும்’ என்று கேட்பவர்கள்
பெண்கள். ‘முன்புள்ள
முதலிகள்’ என்றது, பட்டருக்கு முன்னேயுள்ள
ஆசாரியர்களை. பட்டர் நிர்வாஹத்திலே, ‘திருவருள்
புரிய வேண்டும்’
என்று கேட்பவர்கள் ஆடவர்கள்.
3. படுக்கைப்பற்று
- சீதனம்.
4. ‘இப்படிப் பெண்களுக்குத்
தாழ நின்றால் தன் பெருமைக்குத் தாழ்வு
அன்றோ?’ என்னும் வினாவைத் திருவுளத்தே கொண்டு, அதற்கு
விடை
அருளிச்செய்கிறார், ‘தன்னைத் தொழுது’ என்று தொடங்கி. என்றது, ‘மேல்
பாசுரங்களில் கூறியபடியே, புறம்பே இராசாக்கள் தன்னைத் தொழுது
வணங்கும்படி இருக்கிற ஏற்றம் பொருந்தியவனுக்குப்
பெண்கள்
வணங்குகிறார்கள் என்பதில் ஓர் ஏற்றம் இன்றே? ஆதலால்,
ரசிகத்வத்திற்குச் சேர
இங்ஙனே ஆகவேண்டும்?’ என்றபடி. ரசிகத்வம் -
ரசிகனது தன்மை.
‘கொந்தழல் வேற்க
ணால்என் னாவிகூட்டு உண்ட கொம்பே!
செந்தழை யலங்க லேந்திச்
சீறடி பரவ வந்தேன்;
உய்ந்தினிப் பணிசெய் வேனோ’
உடம்பொழித் தேகு வேனோ?
பைந்தழை அல்குற்
பாவாய்! பணியெனப் பரவினானே.’
‘வீணையுங் குழலும் பாலும்
அமுதமும் கரும்புந் தேனும்
பாணியாழ் கனியும் வென்ற
பைங்கிளி மழலைத் தீஞ்சொல்
வாணிக மகளிர் தாமே வாணிகம்
வல்ல ரென்னாப்
பூண்முலை பொதிர்ப்பப்
புல்லிப் புனைநலம் பருகி னானே.’
என்பன சிந்தாமணி, 1499
- 1500.
‘மனைவி உயர்வும்
கிழவோன் பணிவும்
நினையுங் காலைப்
புலவியுள் உரிய.’
என்பது இலக்கணம்.
(தொல். பொருள். 227.)
|