முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
212

நின்று சாரதி வேஷத்தோடே செய்த தொழிலைச் சொல்லுகிறது. என்றது, 1‘நீண்ட கைகளையுடைய தருமபுத்திரரே! நான் உமக்கு அடியவனாய் இருக்கிறேன்; ஏவிக் காரியங்கொள்ளல் ஆகாதோ?’ என்றமையைத் தெரிவித்தபடி. இவள் - 2அப்பாகிலே பிடிபட்ட இவள். 3‘தாழ்ந்த குணங்கள் இல்லாத அந்தப் பரம்பொருள் உம்முடைய சரீரத்தில் பரந்து இருக்கிறார்,’ என்கிறபடியே, சாரதியாய் இருக்கும் வேஷம் இவள் வடிவிலே நிழல் எழுந்து தோற்றுகிறது இல்லையோ? சிந்தை துழாஅய்த் திசைக்கின்றது - இவள் நெஞ்சு கலங்கி மோஹிப்பது தேர்ப்பாகனார்க்கு; ‘கடல் கலங்கிற்று’ என்றால், ‘மந்தரத்தாலே’ என்று இருக்க வேண்டாவோ? சாரதியாய் இருந்து செய்த தொழில்களைத் தவிர, பரமபதத்தில் முதன்மைக்கு மோஹிப்பாளோ மயர்வு அற மதிநலம் அருளப்பெற்ற இவள்? மயர்வுஅற மதிநலம் அருளப்பெற்றார் கலங்கும் போது அவனுடைய 4அடியார்கட்குப் பரதந்திரப்பட்டு இருக்கும் குணத்திலே ஆகவேண்டாவோ? 5ஒருவனுக்குச் சோகத்தை நீக்கினவன் காணுங்கோள் இவளுக்குச் சோகத்தை விளைத்தான். ஆணுக்குச் சோகத்தைப் போக்கினான்; அபலைக்குச் சோகத்தை விளைத்தான்.

(1)

389

திசைக்கின் றதேஇவள் நோய்; இது
    மிக்க பெருந்தெய்வம்;
இசைப்பின்றி நீர்அணங்கு ஆடும்
    இளந்தெய்வம் அன்றுஇது;

_____________________________________________________

1. ‘தேர்ப்பாகன்’ என்றதனாலே கிடைத்த பொருள் பாரதந்திரியம் என்று
  கொண்டு, அதற்குப்பிரமாணம் காட்டுகிறார், ‘நீண்ட கைகளையுடைய’ என்று
  தொடங்கி. இது, பாரதம்.

2. அப்பாகிலே - அந்தச்  சாரதி வேடத்திலே;  பாகு - பாகன் : தேர்ப்பாகன்.

3. இது பாரதம்; அனுமானைப் பார்த்து வீமன் கூறியது.

4. ‘அடியார்கட்குப் பரதந்திரப்பட்டிருக்கும் குணத்திலேயாக வேண்டாவோ?’
  என்றது, ‘எத்திறம் உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே!’ என்றதனைத்
  திருவுள்ளம் பற்றி.

5. மேலே, ‘கடல்வண்ண ரிதுசெய்தார்; காப்பாரார்?’ என்றவிடத்தில்
  அருளிச்செய்த பொருளை இங்கே காட்டுகிறார், ‘ஒருவனுக்கு’ என்று
  தொடங்கி. ஒருவனுக்கு - அருச்சுனனுக்கு. ‘சோகத்தை நீக்கியது’ என்றது,
  பகவத்கீதையை உபதேசித்து அருச்சுனனுடைய சோகத்தை நீக்கியதைத்
  தெரிவித்தபடி. அபலை - பலமற்றவள்.