முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
215

இன

இன்றியே - நீங்கள் செய்யும் பரிஹாரத்துக்கும் 1உங்களுக்கும் ஒரு சேர்த்தி இல்லை. இந்நோய்க்கும் இவளுக்கும் ஒரு சேர்த்தி இல்லை. முதல்தன்னிலே பகவத்விஷயத்திலே கை வைத்தார் கொள்ளுகைக்குத் தகுதியான நோய் அன்று இதுதான், 2ஒரு வழியாகிலும் ஒரு சேர்த்தி இன்றிக்கே. என்றது, ‘இது உங்களுக்குச் சேர்ந்தது அன்று; உங்கள் மகளாய் நோவு கொண்ட இவளுக்குச் சேர்ந்தது அன்று; நோய்குக் காரணன் ஆன சர்வேசுவரனுக்குச் சேர்ந்தது அன்று; மற்றைத்தேவர்கள் 3இந்நிலத்தில் வந்து புகுரமாட்டாமையாலே நாங்கள் நினைக்கின்ற தேவர்களுக்குச் சேர்ந்தது அன்று,’ என்றபடி.

    இங்கே, நம்பிள்ளை அருளிச்செய்யும் வார்த்தை : 4பிள்ளை உறங்காவில்லி தாசருடைய குடிமகன் ஒருவனுக்கு ஐயனார் ஏறி வலித்து நலிந்தவாறே, ‘உனக்கு வேண்டுவது என்?’ என்று கேட்க, ‘எனக்குப் பாலும் பழமுமாக உண்ண வேண்டும்; சாந்தும் புழுகும் பூச வேண்டும்; நல்ல புடைவை உடுக்க வேண்டும்; நல்ல ஆபரணம் பூணவேண்டும்; தண்டு ஏறவேண்டும்; அணுக்கன் இடவேண்டும்,’ என்ன, அவர்களும், ‘அப்படியே செய்கிறோம்’ என்று பிள்ளையின் திருமாளிகையிலே வந்து, சாந்து, புழுகு, ஆபரணம் முதலானவைகளை வாங்கிக் கொண்டு போய் அவற்றை அலங்கரித்துச் சாந்தியும் செய்துவிட்டு வந்த அவ்விரவு, பண்டையிலும் இருமடங்கு அதிகமாக அவனை வலிக்க, ‘இது என்?’ என்று கேட்க, ‘பிள்ளை சார்த்திக்கொள்ளுகின்றவற்றை எல்லாம்

_____________________________________________________

1. ‘உங்களுக்கும்’ என்றது, பகவத் விஷயத்தில் ஈடுபாடுடைய உங்களுக்கும்’
  என்றபடி. ‘இந்நோய்க்கும்’ என்றது, ‘நீங்கள் நினைத்த நோய்க்கும்’ என்றபடி.
  இந்நோய்க்கும் இவளுக்கும் ஒரு சேர்த்தி இல்லாமையைக் காட்டுகிறார்,
  ‘முதல்தன்னிலே’ என்று தொடங்கி.

2. இன்னார்க்கு ‘இசைப்பின்றியே’ என்னாது, பொதுவாக ‘இசைப்பின்றியே’
  என்று கூறுதற்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘ஒரு வழியாகிலும்’ என்று
  தொடங்கி.

3. ‘இளந்தெய்வம் ‘ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இந்நிலத்தில்’ என்று
  தொடங்கி அருளிச்செய்கிறார்.

4. பாகவதர்களுடைய திருமாளிகைகளிலே புன்சிறு தெய்வங்கள் வந்து
  புகுரமாட்டா என்பதற்கு ஐதிஹ்யம் காட்டுகிறார், ‘பிள்ளை உறங்காவில்லி
  தாசர்’ என்று தொடங்கி. பிள்ளை உறங்காவில்லிதாசர் என்பவர்,
  இராமாநுசருடைய மாணாக்கர். குடிமகன் - பாடியாள். தண்டு - பல்லக்கு.
  அணுக்கன் - குடை.