என
என்னும்’ என்று நீங்கள்
சொல்ல அன்றோ யானும் அறிந்தது? இப்போது பரிஹாரத்தில் வந்தவாறே அறிவு கெடுகிறது என்?
1 அது செய்யுமிடத்தில் குளப்படியிலே கடலை மடுத்தாற்போலேயாகாமல், ‘சங்கு எனும்
சக்கரம் என்னும்’ என்று இவள் சொன்னாற்போலே சொல்லப் பாருங்கோள். இவள் கேட்க நீர்
இசைக்கிற்றிராகில் - செவியிலே படும்படி நீங்கள் தரித்து நின்று ஒரு வார்த்தை மட்டும்
சொல்ல வல்லீர்களேயாகில், மோஹித்துக் கிடக்கிற இவள் கேட்க வல்லளாமன்று காணும், தெளிந்திருக்கிற
இவர்கள் சொல்ல வல்லராவது; ஆகையாலே அன்றோ ‘திசைப்பின்றியே’ என்கிறாள்? இவளுக்கு
இங்ஙனம் சொல்லுமது ஒழிய மற்றொன்றுதான் செவிப்படாதாதலின், ‘கேட்க’ என்கிறாள்.
2ஆய்ச்சி
மகனுடைய அந்திம காலத்தில் பட்டர் ‘அறிய’ என்று எழுந்தருளியிருந்தாராய், தம்மை அறியாமலே
கலங்கிக் கிடக்கிறபடியைக் கண்டு, பெருமாளிடத்தில் இவருடைய பத்தி இருந்தமையைத் தாம் அறிந்திருக்கையாலே,
மெள்ளச் செவியில் ஊதினாற்போலே, ‘அழகிய மணவாளப் பெருமாளே சரணம்’ என்றாராம்;
பின்னர், அதிலே உணர்த்தியுண்டாய் நெடும்போதெல்லாம், ‘அழகிய மணவாளப் பெருமாளே சரணம்’
என்று கூறிக்கொண்டே திருநாட்டுக்கு எழுந்தருளினாராம். 3‘பெற்ற மக்கள் பெண்டிர்
என்றிவர் பின்னுதவாது அறிந்தேன், பிரிந்தேன்,’ என்றார் திருமங்கை மன்னனும். அந்திம காலத்திலே
இருந்து ‘பொன் வைத்தவிடம் சொல்லிக்காணாய்’ என்னுமித்தனைபோக்கி, திருநாமத்தை
அருகே
_____________________________________________________
1. ‘சங்கு எனும் சக்கரம்
என்னும்’ என்று தனித்தனியே சொல்வதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘அது செய்யுமிடத்தில்’
என்று தொடங்கி.
2. ‘சங்கு சக்கரம்’
என்னுமதொழிய மற்றொன்று செவியிலே படாமைக்குக்
காரணம், அதில் ஈடுபாடு என்று கொண்டு, அதற்கு
ஓர் ஐதிஹ்யம்
அருளிச்செய்கிறார், ‘ஆய்ச்சி மகனுடைய’ என்று தொடங்கி.
3.
‘இசைக்கிற்றிராகில்’ என்றதனால், அக்காலத்தில், திருநாமம் சொல்லுதல்
அரிது என்று கொண்டு,
அதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘பெற்ற மக்கள்’
என்று தொடங்கி. இது, பெரிய திருமொழி,
6. 2 : 4.
|