இ
இருந்து சொல்லுவார்கள்
கிடையாரே அன்றோ? 1‘சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்
என்று சுற்றும்’ நெருக்கும் இத்தனையன்றோ?
நன்றே - இது சால
அழகியது! சால நன்றாம். ‘நன்மைக்கு எல்லை யாது?’ என்ன, இல் பெறும் - ‘ஆத்துமாவுக்கு இருப்பிடமாய்
இருக்கின்ற சரீரத்தைப் பெறும்’ என்னுதல். அன்றிக்கே. ‘இல்லக்கிழத்தியாகப் பெறுவாள்’ என்றாராம்
தமிழ்ப் புலவர் ஒருவர். இல் - மனைவி. அன்றிக்கே, ‘ஏயில்பெறும்’ என்று கொண்டு,
2பண்ணை வென்ற இன்சொல் மங்கையாகையாலே, இவள் வார்த்தை சொல்லுவாள் என்னுதல்;
ஏயில் - இசை. 3‘இனியள், இனிய வார்த்தையைப் பேசுகின்றவள்’ என்னக்கடவதன்றோ?
ஆக, ‘சரீரத்தைப் பெறும்’ என்னுதல்; ‘இல்லக்கிழத்தியாம்’ என்னுதல்; ‘வார்த்தை சொல்ல வல்லளாம்’
என்னுதல்.
இது காண்மினே -
4வேறு தேவர்களுடைய சம்பந்தமுடையவர்களும் புகுந்து தொடும்படி இராநின்றீர்களே அன்றோ?
அதைப் போன்று, நான் சொன்ன பரிஹாரத்தையும் செய்து பார்க்கமாட்டீர்களோ? ஒன்றேயோ பரிஹாரம்?
இது நதீமாத்ருகம் போலே பலத்தோடே கூடியிருக்கும். அன்றிக்கே, ‘நான் கை கண்டு அன்றோ
இது சொல்லுகிறது? நீங்களும் இதனைச் செய்து பார்க்க மாட்டீர்களோ?’ என்னுதல். அன்றிக்கே,
5‘வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என்
_____________________________________________________
1. ‘சோர்வி
னால்பொருள் வைத்ததுண் டாகில்
சொல்லு சொல்லென்று
சுற்று மிருந்து
ஆர்வி னாவிலும் வாய்திற
வாதே
அந்த காலம்
அடைவதன் முன்னம்’
என்பது பெரியாழ்வார்
திருமொழி. 4. 5 : 3.
2. ‘பண்ணை வென்ற இன்சொல்
மங்கை கொங்கை தங்கு பங்கயக்
கண்ண நின்ன வண்ண மல்ல
தில்லை என்னும் வண்ணமே’
என்பது, திருச்சந்த விருத்தம்,
105.
3. ஸ்ரீராமா. சுந்.
66 : 15.
4. ‘இது காண்மின்’ என்பதற்கு
மூன்று வகையாகக் கருத்து அருளிச்செய்கிறார்.
‘நதீ மாத்ருகம்’ என்றது, ஆற்றுப்பாய்ச்சலுள்ள
விளை நிலத்தை. ‘நான்
கைகண்டன்றோ’ என்றது, சிலேடை : ‘நான் பிரத்தியக்ஷமாகக் கண்டு’
என்பதும்,
‘கையிலே சங்கு சக்கரங்களைக் கண்டு’ என்பதும் பொருள்.
5. திருவாய்மொழி,
7. 3 : 1.
|