|
New Page 1
நெஞ்சினூடே, புள்ளைக்
கடாகின்ற ஆற்றைக் காணீர்,’ என்னுமாறு போலே, இவளுடைய நெஞ்சிலே பிரகாசிக்கிறபடியை, ‘நான்
சொன்ன மருந்து இவளுக்குச் செய்யுங்கோள், தவிருங்கோள்; செய்தபடி செய்ய, இப்போது இதனைப்
பாருங்கோள்,’ என்று காட்டுகிறாளாகவுமாம். அப்போது ‘நன்றே இல் பெறும்’ என்று பாட்டு
முடிவுறும்; ‘இது காண்மின்,’ என்பது தனி வாக்கியம்.
(2)
390
இதுகாண்மின் அன்னைமீர்!
இக்கட்டு
விச்சிசொற் கொண்டுநீர்
எதுவானும் செய்துஅங்குஓர்
கள்ளும்
இறைச்சியும்
தூவேன்மின்!
மதுவார் துழாய்முடி மாயப்பி
ரான்கழல் வாழ்த்தினால்
அதுவே இவள்உற்ற நோய்க்கும்
அருமருந் தாகுமே.
பொ-ரை :
‘தாய்மார்களே! இதனைக்காணுங்கோள்; இந்தக் கட்டுவிச்சியினுடைய வார்த்தையைக்கொண்டு நீங்கள்
ஏதாகிலும் செய்து அவ்விடத்திலே ஒரு கள்ளையும் மாமிசத்தையும் இறைக்காதீர்கள்; தேன் ஒழுகுகின்ற
திருத்துழாயைத் தரித்த திருமுடியையுடைய மாயப்பிரானுடைய திருவடிகளைத் துதித்தால், துதிக்குமதுவே
இவள் அடைந்திருக்கும் நோய்க்கும் சிறந்த மருந்தாகும்,’ என்றபடி.
வி-கு :
‘அன்னைமீர்! இக்கட்டுவிச்சி சொல்லைக்கொண்டு செய்து தூவேன்மின்,’ என்க. தூவுதல் - வணங்குவதற்காக
வைத்தல். மாயன் -ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவன். பிரான் - உபகாரகன்.
ஈடு :
மூன்றாம் பாட்டு. 1‘பொருந்தாத காரியங்களைச் செய்யாமல் அவன் திருவடிகளை ஏத்துங்கோள்;
அதுவே இந்நோய்க்கும் மருந்து,’ என்கிறாள்.
அன்னைமீர் இது காண்மின்
- 2வயிற்றில் பிறந்தவர்கள் என்னுமது ஒன்றனையே கொண்டு சொல்லுகிற
_____________________________________________________
1. ‘கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்.
வாழ்த்தினால், அதுவே இவள் உற்ற
நோய்க்கும் அருமருந்தாகும்,’ என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. ‘இது காண்மின்’ என
இப்பாசுரத்திலும் கூறுதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
‘வயிற்றில் பிறந்தவர்கள்’ என்று தொடங்கி.
‘அன்னைமீர்!’ என்றதற்கு பாவம்,
‘ஏவுகின்றவர்கள்’ என்று தொடங்கும் வாக்கியம்.
|