முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
223

இவள

இவள் உற்ற நோய்க்கும் அருமருந்து ஆகும் - இவள் மறுபாடு உருவக் கொண்ட நோய்க்கு பெறுதற்கு அரிய மருந்தாம். என்றது, ‘மேல் காற்றிலே காட்டப் பரிஹாரமாம்,’ என்றபடி.                    

(3)

391

மருந்துஆகும் என்று,அங்குஓர் மாய
    வலவைசொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும்
    களன்இழைத்து என்பயன்?
ஒருங்காக வேஉலகு ஏழும்
    விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர்சொல்ல கிற்கில்,
    இவளைப் பெறுதிரே.

    பொ-ரை : ‘இவள் நோய்க்குப் பரிஹாரமாகும் என்று நினைத்து, வஞ்சனை பொருந்திய ஒரு வலவையினது சொல்லைக் கொண்டு நீங்கள் கருஞ்சோற்றையும் செஞ்சோற்றையும் அங்கே அத்தேவர்களுடைய முன்னிலையில் படைப்பதால் பயன் யாது? ஒருசேர ஏழ் உலகங்களையும் பிரளயகாலத்தில் உண்டு, பின் பிரளயம் நீங்கினவுடனே வெளி நாடு காண உமிழ்ந்த அறப்பெரிய சர்வேசுவரனது திருப்பெயரைச் சொல்லுவீர்களேயானால், இவளைப் பெறுவீர்கள்,’ என்றவாறு.

    வி-கு : மருந்து - பரிஹாரம். வலவை - பலவாறு பேசுகின்றவள். களன் - படைக்குமிடம். ‘சொற்கொண்டு இழைத்துப் பயன் என்?’ என்க. பெருந்தேவன் - ‘முதலாவார் மூவரே; அம் மூவ ருள்ளும் முதலாவான் மூரிநீர் வண்ணன்,’ என்பதனைக் குறித்தபடி.

    ஈடு : நாலாம் பாட்டு. 1‘வஞ்சனையுடையவளாய்த் தோன்றியதைச் சொல்லுகிற இவளுடைய பலவாறான வார்த்தைகளை விட்டு, ஆபத்திற்குத் துணைவனான சர்வேசுவரனுடைய திருநாமத்தைச் சொல்ல வல்லீர்கோளாகில், இவளைப் பெறலாம்,’ என்கிறாள்.

    மருந்து ஆகும் என்று - 2பத்தியத்திற்கு மாறானவற்றைச் செய்கின்றவர்கள் மருந்து ஆகும் என்று. ‘பத்தியம்’

_____________________________________________________

1. ‘மாய வலவை’ என்று தொடங்கி மேல் உள்ளவற்றையெல்லாம் கடாக்ஷித்து,
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘மருந்து’ என்னாதே, ‘மருந்தாகும்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘பத்தியத்திற்கு’ என்று தொடங்கி. ‘மருந்தாகாததனை ‘மருந்தாகும்’ என்று
  சொல்லி’ என்றபடி.