முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
226

கஷ

கஷ்டப்பட்டு ஆராதிக்கப்படுமவன் அல்லன். 1தான் காக்குமிடத்தில் இத்தலையில் காப்பதற்கு அறிகுறியான விலக்காமையே வேண்டுவது. இதனால், ‘அந்தப் பிரளயம் தீர்த்தவனேகாணும் இந்தப் பிரளயத்துக்கும் கடவன்; நம்மோடு ஒக்கப் பிரளயத்திலே அழுந்தும் புன்சிறு தெய்வங்களையோ பற்றுவது? வரையாதே எல்லாப் பொருள்களையும் பாதுகாப்பவனாயுள்ளவனை அன்றோ பற்றத் தகுவது?’ என்கிறாள் என்றபடி.

    பேர் சொல்லகிற்கில் - திருப்பெயரைச் சொல்ல வல்லீர்கோளேயானால். ‘இப்படி 2நேர்த்தி அற்று இருக்குமாகில் பலமும் அளவுபட்டு இருக்குமோ?’ என்னில், இவளைப் பெறுதிர் - அத்தேவதைகள் மாட்டு நேர வேண்டுவன எல்லாம் நேர்ந்தாலும், ‘என் பயன்?’ என்று பிரயோஜனம் இல்லையாகச் சொல்லிற்று; இங்கு நேர்த்தி திருநாம மாத்திரம் சொல்லுகையாய், பேற்றில் வந்தால் இவளைப் பெறுதலாகிற பெரிய பலத்தைப் பெறலாம். ‘பேர் சொல்ல வல்லீர்கோளாகில் இவளைப் பெறலாம்; 3இல்லையாகில் இழக்குமித்தனை,’ என்றபடி.

(4)

392

இவளைப் பெறும்பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!
குவளைத் தடங்கண்ணும் கோவைச்செவ் வாயும் பயந்தனள்;
கவளக் கடாக்களிறு அட்டபி ரான்திரு நாமத்தால்
தவளப் பொடிகொண்டு நீர்இட் டிடுமின்; தணியுமே.

    பொ-ரை : ‘ஐயோ! இவளைப் பெறுதற்குரிய வழி இந்த அணங்கு ஆடுதல் அன்று; குவளை போன்ற விசாலமான கண்களும் கொவ்வைக்கனி  போன்ற சிவந்த வாயும் பசலை நிறத்தை அடைந்தாள். கவளத்தை உண்ணுகின்ற மதம் பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையைக் கொன்ற கண்ணபிரானுடைய திருப்பெயரைச் சொல்லிக்

_____________________________________________________

1. ‘ஆனால், பேர் சொல்லுவான்  என்?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘தான் காக்குமிடத்தில்’ என்று தொடங்கி.

2. நேர்த்தி - முயற்சி.

3. ‘பேர் சொல்லகிற்கில்’ என்கையாலே, ‘சொல்லமாட்டாத போது விநாசம்’
  என்கிறார், ‘இல்லையாகில்’ என்று தொடங்கி.