முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
229

ஸ்ரீ

ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பாததூளியைக் கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்,’ என்கிறாள். ஆக, ‘இங்கே புகுந்த அநீதிகள் இரண்டு உள : அவ்விரண்டனுக்கும்  இவ்விரண்டனையுங்கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்,’ என்கிறாள் என்றபடி. ‘இப்படிச் செய்தல் பரிஹாரம் ஆகுமோ?’ என்ன, தணியுமே - இவள் கண்ணும் விழித்து நிறமும் வரும்படி காட்டித்தரக்கடவேன்.

(5)

393

தணியும் 1பொழுதுஇன்றி நீர்அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இதுஅல்லால்;
மணியின் அணிநிற மாயன் தமர்அடி நீறுகொண்டு
அணிய முயலின், மற்றுஇல்லை கண்டீர்இவ்வணங்குக்கே.

    பொ-ரை : ‘தாய்மார்களே, நீங்கள் தவிர்வது ஒரு காலம் இல்லாமலே அணங்கு ஆடுகின்றீர்கள்; வியாதியும் மேலும் மேலும் மிகுகின்றது என்னும் இதுவேயல்லாமல் நீங்கிற்றில்லை; நீலமணி போன்ற அழகிய நிறம் வாய்ந்த மாயனுடைய அடியார்களுடைய பாததூளியைக்கொண்டு அணிவதற்கு முயற்சி செய்தால், அதுவே இவள் உற்ற நோய்க்கு அருமருந்தாகும்; அது ஒழிய இந்தப் பெண்ணிற்கு வேறு ஒரு பரிஹாரம் இல்லைகண்டீர்.

    வி-கு : ‘அன்னைமீர்! நீர் தணியும் பொழுது இன்றி அணங்கு ஆடுதிர்; பிணியும் பெருகும். இது அல்லால் ஒழிகின்றது இல்லை,’ என்க. நீறு - புழுதி; தூளி. மற்று - பிறிது என்னும் பொருளில் வந்தது. கண்டீர் - முன்னிலையசை; தேற்றமுமாம்.

    ஈடு : ஆறாம் பாட்டு. 2இந்தப் பெரிய முயற்சி எல்லாம் வேண்டா; ‘தவளப்பொடி’ என்று சொன்னது இன்னது என்று விசேடித்து, ‘அதனைச் செய்ய முயன்ற அளவிலே இவள் நோய் தீரும்,’ என்கிறாள்.

    அன்னைமீர்! நீர் தணியும் பொழுது இன்றி அணங்கு ஆடுதிர் - விலக்குவார் உளர் ஆகையாலே, ‘இன்ன போது தவிரச் சொல்லுவர்கள்’ என்று அறியாமையாலே, உச்சி வீடு விடாதே அவர்கள் ஆடத் தொடங்கினார்கள். பிணியும்

_____________________________________________________

1. ‘பொழுதில்லை’ என்பதும் பாடம்.

2. ‘மாயன் தமரடி நீறுகொண்டு’ என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து,
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.