தன
தன்னுடைய சரீரத்தைக்
காப்பதற்காக அவர்கள் பக்கலிலே சென்று இரக்கத் தொடங்கும். துணி முன்பு நால - 1‘அந்தத்
திரிஜடன் என்னும் பிராஹ்மணன் மனைவியின் வார்த்தையைக் கேட்டு உடுத்துவதற்குப் போராத துணியை
உடுத்திக்கொண்டு புறப்பட்டான்,’ என்கிறபடியே, பின்பு கொண்டு இணைக்க எட்டம் போராமையாலே
முன்னே தொங்காநிற்கும். பல் ஏழையர்தாம் இழிப்ப -2இவன்பக்கல் தங்களுக்கு உண்டான
அன்பு தோன்றச் 3செத்துக் காட்டுவர்கள் முன்பு; இப்போது, தங்களை வைத்துக்கொண்டு
இருப்பவனுக்குப் பிரியமாக, இவன் இன்பத்தை அனுபவிப்பதற்குத் தகுதி இல்லாதவன் என்பதனையும்,
இவனிடத்துள்ள உலோபத் தன்மையையும் சொல்லி விருப்பம் இல்லாத சொற்களைக் கூறாநிற்பார்கள்.
இவர்கள் தாம் பலர் ஆதலின், ‘பல் ஏழையர்’ என்கிறார். செல்வர் - ‘நம்மிடத்துள்ள
அன்புத்தளை அன்றோ இவர்களை இங்ஙனம் சொல்லச் செய்கிறது?’ என்று, அவர்கள் கூறிய வார்த்தைகளையும்
புத்தி பண்ணாதே செல்வார்கள்;
_____________________________________________________
1. ‘முன்பு நால’
என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார். ‘அந்தத் திரிஜடன்’
என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா.
அயோத். 32 : 32. எட்டம் - நீளம்.
‘நீர்ப்படு பருந்தின்
இருஞ்சிற கன்ன
பாறிய சிதாரேன்’
(பதிற். 12. 19-20)
‘கையது கடனிறை யாழே; மெய்யது
புரவல ரின்மையிற் பசியே;
அரையது
வேற்றிழை நுழைந்த வேர்நனை
சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவற் பாண!’
(புறம். 69)
‘வேரொடு நனைந்து வேற்றிழை
நுழைந்த
துன்னற் சிதாஅர் துவர
நீக்கி’
(பொருநராற். 80-81 )
என்பன ஈண்டு ஒருபுடை ஒப்பு
நோக்கத் தக்கன.
2. ‘ஏழையர்’ என்பதற்கும்,
‘இழிப்ப’ என்பதற்கும் வாசனை ‘இவன் பக்கல்’
என்று தொடங்கும் வாக்கியம்.
3. ‘அங்கோட்டு
அகலல்குல் ஆயிழையாள் நம்மொடு
செங்கோடு
பாய்துமே என்றாள்மன் - செங்கோட்டின்
மேற்காண மின்மையால்
மேவா தொழிந்தாளே
காற்கால்நோய் காட்டிக்
கலுழ்ந்து.’
(நாலடியார்)
என்ற செய்யுள் ஈண்டு
ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.
|