1 வண
1
வண்டரும் சொண்டரும் என்கிறவர்களுக்கு அரையன் சொன்ன வார்த்தைக்குப் பிள்ளை உறங்கா
வில்லிதாசர் பரிஹாரம் செய்தபடியை இங்கே
நினைப்பது. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், அகளங்க நாட்டாழ்வான் இவர்களுக்கு
அமணன் பாழியிலே சிங்கத்தைக் காட்டித் ‘திருமுற்றம்; திருவடி தொழுங்கோள்,’ என்ன, அவர்களும்
மெய் என்று திருவடி தொழுது, ‘அது அமணன் பாழி’ என்று அறிந்தவாறே மோஹித்து விழ, பிள்ளை உறங்கா
வில்லி தாசர் தம் ஸ்ரீ பாத தூளியை அவர்களுக்கு இட, உணர்ந்து எழுந்திருந்த உண்மை வரலாற்றினை
உணர்த்தியபடி.
2திருக்கொட்டாரத்தின்
அருகே கைந்நிரை கட்டிக் கொண்டிருக்கிற நாளிலே, சீயர் இத்திருவாய்மொழி அருளிச்செய்கிறாராய்
இப்பாசுரத்தளவிலே வந்தவாறே, ‘ ‘தேர்ப்பாகனார்க்கு’ என்று நோய்க்கு நிதானம்
சொன்னாளாகில், அத்தேர்ப்பாகனையிட்டு நீக்கிக்கொள்ளாமல், ‘மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின்’ என்று இதனைப் பரிஹாரமாகச் சொல்லுவான் என்? நோய்க்குக் காரணம் ஒன்றும் பரிஹாரம்
ஒன்றுமேயாயோ இருப்பது?’ என்று நான் கேட்டேன்; ‘மோர்க்குழம்பு இழியாதே மோஹித்துக் கிடந்த
சமயத்தில் சுக்கு இட்டு ஊதிப் பின்பு மோர்க்குழம்பு கொடுத்துப் பரிஹரிப்பாரைப் போலே,
‘தேர்ப்பாகனார்க்கு’ என்ற போதே அவரைக் கொடுவந்து காட்டப்பெறாமையாலே, முற்பட இவ்வழியாலே
தேற்றிப் பின்னை அவரைக் கொடு வந்து காட்டுவதாகக்காணும்’ என்று அருளிச்செய்தார்.
‘அழகு சீலம் முதலியவைகளாலே
ஆயிற்று இவள் மோஹித்தது; நீங்களும் அழகு சீலம் முதலியவைகளிலே
_____________________________________________________
1. ‘தேவதாந்தர பரிசத்தால்
வந்த அசுத்திக்குப் பாகவதர்களுடைய பாததூளி
பரிஹாரம்’ என்றதற்கு ஐதிஹ்யம் காட்டுகிறார்,
‘வண்டரும் சொண்டரும்’
என்று தொடங்கி. அரையன் - அரசன் அமணன் பாழி - சமணர் கோயில்.
2. வேறு தேவர்களின்
பரிசத்தால் வந்த அசுத்திக்குப் பரிஹாரமாமளவன்றிக்கே,
முதற்பாசுரத்தில் சொன்ன பகவானைப்
பிரிந்ததனாலுண்டான நோய்க்கும்
இதுவே பரிஹாரம் என்னுமதனை ஐதிஹ்ய முகத்தால் தரிசிப்பிக்கிறார்,
‘திருக்கொட்டாரத்தின்’ என்று தொடங்கி. கைந்நிரை - நிரைச்சு. சீயர் -
நஞ்சீயர்.
‘நான் கேட்டேன்’ என்றது, நம்பிள்ளையை.
|