|
New Page 1
தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய
பாததூளியைக் கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்,’ என்பாள், ‘மணியின் அணி நிற மாயன்
தமர் அடி நீறு கொண்டு’ என்கிறாள். 1‘பொடி படத் தீரும்’ என்றபடி. மற்று இல்லைகண்டீர்
இவ்வணங்குக்கே - இஃது அல்லது பரிஹாரம் இல்லாதபடியான மேன்மையை உடைய இவளுக்கு இதனையே பரிஹாரமாகப்
பாருங்கோள்.
(6)
394
அணங்குக்கு
அருமருந்து என்று,அங்குஓர்
ஆடும் கள்ளும்பராய்,
2துணங்கை
எறிந்து,நும் தோள்குலைக்
கப்படும்
அன்னைமீர்!
உணங்கல் கெடக்கழு
தைஉதடு
ஆட்டம்கண்டு
என்பயன்?
வணங்கீர்கள்
மாயப் பிரான்தமர்
வேதம்வல்
லாரையே.
பொ-ரை :
‘இப்பெண்ணினுடைய நோய்க்கு அரிய மருந்தாகும் என்று நினைத்து, அங்கே ஓர் ஆட்டினையும் கள்ளினையும்
வைத்துத் துதித்துத் துணங்கை என்னும் கூத்தினை ஆடி உங்களுடைய தோள்களை வருத்துகின்ற தாய்மார்களே!
காய்கின்ற நெல் கெட, அதனைத் தின்னுகின்ற கழுதையினுடைய உதடு ஆடுகின்ற ஆட்டத்தைக் கண்டுகொண்டு
இருப்பதனால் பயன் யாது? மாயப்பிரானுடைய அடியார்களாகிற ஸ்ரீ வைஷ்ணவர்களை வணங்குங்கோள்,’ என்றவாறு.
வி-கு :
பராய் - துதித்து. ‘துணங்கை’ என்பது, கூத்து வகைகளுள் ஒன்று; ‘துணங்கை - சிங்கி; என்னை?
‘பழுப்புடை இருகை முடக்கி யடிக்க, தொடக்கிய நடையது துணங்கை யாகும்,’ என்பது (சிலப்.) அடியார்க்கு
நல்லாருரை. உணங்கல் - காயவைத்துள்ள நெல். வேதம் வல்லார் - வேதங்களிலே வல்ல ஸ்ரீ வைஷ்ணவர்கள்.
ஈடு :
ஏழாம் பாட்டு. 3 ‘மற்றைத் தேவர்களைப் பற்றினால் இவளுடைய அழிவே பலித்துவிடும்;
இவள்
_____________________________________________________
1. ‘பொடிபடத் தீரும்’
என்றது, சிலேடை : ‘ஸ்ரீ பாததூளி படத் தீரும்’
என்பதும், ‘தூளியாய்ப் போம்’ என்பதும் பொருள்.
2. ‘சுணங்கை எறிந்து’ என்பதும்
பாடம்.
3. ‘கழுதை உதடு ஆட்டம்
கண்டு என் பயன்? மாயப்பிரான் தமர் வேதம்
வல்லாரை வணங்கீர்கள், என்றதனைக் கடாக்ஷித்து,
அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
|