சம
சம்பந்தமுடையாருடைய செயல்களைக்
கண்டுகொண்டிருக்கிற இதனால் என்ன பிரயோஜனம் உண்டு? பிரயோஜனம் இல்லாமை மாத்திரமே அன்று;
அழிவே சித்திப்பது. அன்றிக்கே, உணங்கல் கெட - இவளுடைய உணங்குதல் கெட; ‘இவள் இளைப்புத்
தீர’ என்றபடி. கழுதை - பேயை, கழுது - பேய். உதடு ஆட்டம் கண்டு என் பயன் - நீங்கள் ஆடும்
கள்ளும் பிரார்த்தித்துக் கொடுக்க, அது அதனை உண்ணும்போது அதனுடைய உதடு ஆடுகிறபடியைக் கண்டிருப்பதனால்
என்ன பயன் உண்டு?’ என்று ஐயன் திருக்குருகைப்
பெருமாள் அரையர் நிர்வஹிப்பர். 1‘கழுது
பேயும் பரணும்’ என்னக்கடவதன்றோ?
‘இதில் பிரயோஜனம்
இல்லையாகில், பிரயோஜனத்தினை உடையதாய் இருக்குமதனைச் சொல்லாய்,’ என்ன, வணங்கீர்கள் -
அவர்கள் திருவடிகளிலே விழுப்பாருங்கோள். ‘‘அவர்கள்’ என்றது யாரை?’ என்ன, மாயப்பிரான்
தமர் வேதம் வல்லாரை - ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனுடைய குணங்களிலே ஈடுபட்டிருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை. 2‘எல்லா வேதங்களாலும் அறியப்படுமவன் யானே,’ என்றும், 3‘எல்லா
வேதங்களும் எந்தப் பரம்பொருளிடத்தில் ஒரே முகமாய் ஆகின்றனவோ’ என்றும், 4எல்லாச்சொற்களுக்கும்
எவரிடத்தில் தாத்பரியமோ அந்தக் கோவிந்தனை வணங்குகிறோம்,’ என்றும் சொல்லுகிறபடியே, வேத
தாத்பரியம் கைப்பட்டிருக்குமவர்கள் ஆதலின், ‘வேதம்
வல்லார்’, என்கிறது.
‘‘வேதம் வல்லார்’
என்று இங்குக் கூறுதற்குக் கருத்து என்?’ என்னில், ‘வேறு தெய்வங்களின் சம்பந்தமுடையார் புகுந்து
சிகிச்சை செய்வதற்குப் பரிஹாரமே அன்றோ இவள் சொல்லப் புகுந்தது? அதில், ‘அவனை ஒழிந்தது
ஒரு தேவதைக்குத் தனித்து ஓர் உயிர்ப்பு இல்லை;
_____________________________________________________
1. கழுது என்ற சொல், பேய்
என்ற பொருளில் வருவதற்கு மேற்கோள் : ‘கழுது
பேயும் பரணும்’ என்பது. இது, நிகண்டு. ‘பேய் உதடாட்டம்
காணுதல்’
என்றது, பேயை ஒருவன் பக்கலிலே ஆவேசிப்பித்துப் பண்டங்களை இட்டு
அதனுடைய உதடுகள்
அசைதலைப் பார்த்துக்கொண்டிருத்தலைக் குறித்தபடி.
2. ஸ்ரீ கீதை. 15 : 15.
3. கடவல்லி உப. 1. 2 :
15.
4.
ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 14 : 23.
|