அவ
அவனே உத்தேஸ்யம்,’ என்று
இருக்குமவர் காலிலே விழுங்கோள்,’ என்று கூறுதல். ‘தேவதைகள்தோறும் தனித்தனியே காரியம் உண்டு’
என்று இராமல், ‘எல்லாச் சொற்களும் ஒரே பொருளைச் சொல்லுவது’ என்று இருக்குமவர்களைப் பற்றப்
பாருங்கோள் என்கிறாள்’ என்றபடி.
(7)
395
வேதம்வல் லார்களைக்
கொண்டுவிண்
ணோர்பெரு
மான்திருப்
பாதம் பணிந்து,இவள்
நோய்இது
தீர்த்துக்கொள்
ளாதுபோய்,
ஏதம் பறைந்து,அல்ல
செய்து,கள்
ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர்அணங்கு
ஆடுதல் கீழ்மையே.
பொ-ரை :
‘வேதத்திலே வல்லவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களைக்கொண்டு நித்தியசூரிகளுக்குத் தலைவனான சர்வேசுவரன்
திருவடிகளை வணங்கி, இவளுடைய நோயாகிய இதனைத் தீர்த்துக் கொள்ளாமல், சிறு தெய்வங்கள் பக்கல்
சென்று குற்றமுள்ளவற்றைச் சொல்லிச் செய்யத் தகாத காரியங்களைச் செய்து, கள்ளினை வீட்டிற்குள்ளே
கலந்து தூவிக் கீதத்தோடு கூடின முழவென்னும் வாத்தியத்தை அடித்து நீங்கள் அணங்கு ஆடுதல் இக்குடிக்கு
இழுக்கேயாம்,’ என்றவாறு.
வி-கு :
‘வேதம் வல்லார்களைக் கொண்டு பாதம் பணிந்து தீர்த்துக்கோடல் தக்கது,’ என்க. அங்ஙனமன்றி,
‘போய்ப் பறைந்து செய்து தூவி ஆடுதல் கீழ்மையாம்,’ என்க. ஏதம் - குற்றம். பறைந்து -
சொல்லி. கலாய் -கலந்து.
ஈடு :
எட்டாம் பாட்டு. 1‘ஸ்ரீ வைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு சர்வேசுவரன் திருவடிகளிலே
சரணம் புக்கு இவளுடைய நோயைத் தீர்த்துக்கொள்ளுதலை விட்டு, புன்சிறு தெய்வங்களைப் பற்றுதல்
உங்களுக்குக் கீழ்மையை விளைக்கும்,’ என்கிறாள்.
வேதம் வல்லார்களைக்
கொண்டு - ‘சர்வேசுவரனே பலமும் பலத்தை அடைதற்குரிய வழியும்,’ என்கிற வேத தாத்பரியம் கைப்பட்டவர்களைப்
புருஷகாரமாகக்
_____________________________________________________
1. திருப்பாசுரம்
முழுதினையும் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|