396
396
கீழ்மையி னால்அங்குஓர்
கீழ்மகன்
இட்ட முழவின்கீழ்
நாழ்மை பலசொல்லி,
நீர்அணங்கு
ஆடும்பொய்
காண்கிலேன்;
ஏழ்மைப் பிறப்புக்கும்
சேமம்இந்
நோய்க்கும்ஈ
தேமருந்து;
ஊழ்மையில் கண்ணபி
ரான்கழல்
வாழ்த்துமின்
உன்னித்தே.
பொ-ரை :
‘அங்குத் தாழ்ந்த மகனாலே அடிக்கப்படுகின்ற முழவின்கீழே இருந்துகொண்டு, குற்றமுள்ளன பலவற்றைச்
சொல்லிக்கொண்டு, நீங்கள் உங்கள் கீழ்மையினாலே அணங்கு ஆடுகின்ற பொய்யை நான் காணமாட்டேன்;
எழுவகைப்பட்ட பிறப்புகளுக்கும் பாதுகாவலாம்; இதுவே இந்நோய்க்கும் மருந்தாகும்; ஆதலால், முறையாகக்
கண்ணபிரானுடைய திருவடிகளை நினைத்து வாழ்த்துங்கள்,’ என்றவாறு.
வி-கு :
‘நீர் கீழ்மையினால் அணங்கு ஆடும் பொய்’ எனக் கூட்டுக. ‘கண்ணபிரானுடைய கழல் உன்னித்து
வாழ்த்துமின்,’ என மாறுக. நாழ்மை : குற்றம்.
ஈடு :
ஒன்பதாம் பாட்டு. 1‘நீங்கள் செய்கின்ற பயன் இல்லாத காரியங்களை நான் காணமாட்டேன்;
பிழைக்க வேண்டும் என்று இருந்தீர்கோளாகில், கிருஷ்ணன் திருவடிகளை நினைத்து வாழ்த்துங்கள்,’
என்கிறாள்.
கீழ்மையினால் -
உங்கள் தண்மையினாலே; இவர்களுக்குத் தண்மையாவது, இராஜச தாமச குணங்களாலே மறைக்கப்பட்டிருத்தல்.
‘ஆகையால் அன்றோ இக்காரியம் செய்கிறார்கள்?’ என்றபடி. அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின்கீழ்
- 2‘இன்ன இடத்தான், இன்னான்’ என்று சொல்ல ஒண்ணாத ஒரு சண்டாளன் அடிக்கிற முரசின்
கீழே புக்கிருந்து. நாழ்மை பல சொல்லி - அவற்றுக்கு இல்லாத ஏற்றங்களைப் பலவும் சொல்லி;
என்றது, 3‘உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும்’ என்று
_____________________________________________________
1. ‘பொய்’ என்றதனை நோக்கிப்
‘பயனில்லாத காரியங்களை’ என்கிறாள்.
2. ‘ஓர்’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘இன்னவிடத்தான், இன்னான்’
என்று தொடங்கி.
3.
திருவாய்மொழி, 4. 5
: 10.
|