என
என்றது, 1‘முன்பு
‘திருவருள் பணிமின்’ என்ற போது ஊடல் காரணமாகக் கூறிய வார்த்தையைப் போன்றதாக இதனையும் நினைத்துச்
செல்வர்,’ என்றபடி. ‘நன்று; இன்பத்தை அனுபவிப்பதற்குத் தகுதி இன்றிக்கே இருக்க, செல்லுதற்குக்
காரணம் என்?’ எனின், ‘கிழத்தன்மை அடைந்தவனுக்குத் தலைமயிர்கள் உதிர்கின்றன; பற்கள்
விழுகின்றன; கண்களின் பார்வை குறைகின்றது; ஆசை ஒன்று மாத்திரம் ஒருவிதக் கேடும் இன்றி
இருக்கின்றது,’ என்னக் கடவது அன்றோ?
‘ஆன பின்பு,
2‘பக்தாநாம் - ‘பக்தர்களுக்காகவே என்று இருக்கிற உடம்பைப் பற்றப்
பாருங்கோள்’ என்கிறார் மேல் : மணி மின்னு மேனி - நீலமணி போன்று காந்தியையுடைத்தான திருமேனி;
அன்றிக்கே, ‘நீலமணியைக்காட்டிலும் விஞ்சின அழகையுடைத்தான திருமேனி’ என்னுதல். ‘நன்று; திருமேனி
பத்தர்களுக்காகவே இருக்குமோ?’ எனின், 3‘இரண்டு சரீரங்களைக் கொடுத்து உதவிய
மகாத்துமாவான அந்த அனுமானுக்கு, விலக்காதது
_____________________________________________________
1. ‘அவர்கள் கூறிய
வார்த்தைகளைப் புத்தி பண்ணாதே செல்லுகைக்கு அடி
யாது?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘முன்பு’ என்று
தொடங்கி.
2. ஜிதந்தா
ஸ்தோத்திரம், 5.
‘தேவரீருடைய திவ்யாத்ம
சொரூபமானது தேவரீருக்கு அன்று; திவ்ய
மங்கள விக்கிரஹமும் தேவரீருக்கு அன்று; திருவாழி முதலான
ஆயுதங்களும் தேவரீருக்கு அன்று; அப்படியிருந்தும், திவ்ய மங்கள
விக்ரஹத்தையுடையவராகவே இருக்கிறீர்;
தேவரீர் பத்தர்களுக்காகவே
பிரகாசிக்கின்றீர்,’ என்பது அச்சுலோகத்தின் பொருள்.
3. ஸ்ரீராமா. யுத்.
1 : 13. இச்சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த
பொருள் பின்வருமாறு : ஏஷ : - தாம்
அனுபவித்துத் தமக்கு ரசித்தது
என்று பிறர்க்குக் கொடுப்பாரைப் போலே; இச்சா க்ருஹீதாபிமதோருதேஹ’:
(விஷ்ணு புரா. 6. 5 : 84.) என்னக் கடவதிறே. ‘இச்சா க்ருஹீதம்’
என்கையாலே, கர்ம நிபந்தனம்
அல்ல என்று தோற்றுகிறது; ‘அபிமதம்’
என்கையாலே, தனக்கும் போக்கியம் என்று தோற்றுகிறது;
சர்வ ஸ்வபூத : -
இது ஒழிய மற்றொன்றைக் கொடுத்தாலும் இது கொடாததால் வரும் குறை
கிடக்குமே?
திருமேனியைக் கொடுக்கவே எல்லாம் கொடுத்ததாமிறே;
சர்வஅபாஸ்ரயமாயன்றோ திருமேனிதான்
இருப்பது! மற்றுக்
கொடுக்குமதிலும் இதுக்கு உண்டான வியாவிருத்தி தோற்றி இருக்கிறது
பரிஷ்வங்கோ
ஹநூமத : - அமிருதாசிக்குப் புல்லையிட ஒண்ணாதே!
ஸ்நேஹோமே பரம : - (உத்தரராமாயணம்) - என்று இவ்வுடம்பை
விரும்பினவனுக்கு இத்தையே கொடுக்கவேணுமே. மயா காலமிமம் பிராப்ய
தத்த:
‘இவன் ஒன்று கொள்வான் ஒருவன் அல்லன்; நாம் இவனுக்கு ஒன்று
கொடுக்கப் பெறுவதுகாண்,’ என்று
குறைபட்டிருந்தவர், இவன்
விலக்காததொரு சமயம் பெற்று இப்படிக் கொடுத்துக்கொண்டு நின்றார்.
தஸ்ய மஹாத்மந : - ஒரு படி கொடுத்தாராய் ஒன்று செய்த இத்தனை
போக்கி, இரண்டு உடம்பு கொடுத்தவனுக்கு
ஓர் உடம்பு தரம் அன்றிறே.
வேணி உத்க்ரதனத்திலே பிராட்டி ஒருப்பட்ட அன்று அவளை உளள்
ஆக்கினான்;
‘அவகாஹ்யார்ணவம் ஸ்வப்ஸ்யே’ (ஸ்ரீராமா. யுத்.) என்ற
பெருமாளை மீட்டு அவரை உளராக்கி இப்படி
இவர்க்கு இரண்டு உடம்பு
கொடுத்தானிறே அவன். அவன் பல படி உபகரிக்கையாலே இவர் ஒருபடி
உபகரித்தார்,’ என்பது.
|