முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
240

New Page 1

முறை. அன்றிக்கே, நீங்கள் செய்கிறவை போலன்றிக்கே, முறையிலே செய்ததாகவுமாம்.’

    கண்ணபிரான் கழல் உன்னித்து வாழ்த்துமின் - ‘உபகாரகனான கிருஷ்ணன் திருவடிகளை வாழ்த்தப் பாருங்கோள். 1‘அடிக்கழஞ்சு பெறும் மருந்தேயன்றோ அது? அது செய்யுமிடத்தில் எல்லாரும் ஒக்க நினைத்து வாழ்த்தப்பாருங்கோள்,’ என்பாள், ‘வாழ்த்துமின்’ எனப் பன்மை வாய்பாட்டாற்கூறுகின்றாள். 2இப்படிச் செய்யவே, எல்லாப் பிறவிகளிலும் பாதுகாவலாய் இவள் நோய்க்கும் பரிஹாரமாம்; மேலும், செய்யத்தக்கதனைச் செய்தவர்களும் ஆவோம். 3‘பகவான் தம்மை நினைத்த அளவில் மங்களத்தைக் கொடுக்கிறார்,’ என்பது ஸ்ரீ விஷ்ணு புராணம்.                      

(9)

397

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனைஅல்லால்;
நும்இச்சை சொல்லி,நும் தோள்குலைக் கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண்துவ ராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துத லும்,தொழுது ஆடுமே.

    பொ-ரை : ‘சர்வேசுவரனை அல்லாமல் வேறு ஒரு தெய்வத்தை நினைந்து வணங்கமாட்டாள் இவள்; இங்ஙனமிருக்க, உங்களுக்கு விருப்பமானவற்றையெல்லாம் சொல்லி, உங்களுடைய தோள்களை வருத்திக்கொள்ளுகின்ற தாய்மார்களே! என்றும் நிலைத்திருக்கின்ற வேதங்களால் சொல்லப்படுகின்றவனும் வளப்பம் பொருந்திய துவாரகைக்கு அரசனுமான சர்வேசுவரனைத் துதி செய்யுங்கள்; துதி செய்த அளவிலே அவனைத் தொழுது ஆடுவாள்,’ என்றவாறு.

    வி-கு : ‘உன்னித்துத் தொழாள்’ என்க. ‘சொல்லிக் குலைக்கப்படும் அன்னைமீர்’ என்க. மன்னுதல் - நிலை பெறுதல்.

_____________________________________________________

1. ‘அடிக்கழஞ்சு’ என்றது, சித்தமாய், விரைவில் பலத்தைக் கொடுக்கக்
  கூடியதாய், சொரூபத்திற்குத் தகுதியானது ஆகையாலே, சிலாக்கியம்’
  என்றபடி. அடிக்கழஞ்சு - பெருமதிப்பு : பொன்.

2. ‘இப்படிச்செய்யவே’ என்றது, ‘உன்னித்து வாழ்த்தவே’ என்றபடி.

3. ‘உன்னுதல் மாத்திரம் போதியதாமோ?’ என்ன, ‘போதியதாம்’ என்பதற்கு
  மேற்கோள் காட்டுகிறார், ‘பகவான்’ என்று தொடங்கி. இது, ஸ்ரீ விஷ்ணு
  புரா.
1. 17 : 78. இஃது, அசுர புத்திரர்களுக்கு ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்
  கூறியது.