ஈ
ஈடு :
பத்தாம் பாட்டு. 1‘இவளுக்குக் கிருஷ்ணன் திருவடிகளில் உண்டான ஐகாந்தியத்தை நினைத்து,
அவனை ஏத்துங்கோள்; இவள் பிழைப்பாள்,’ என்கிறாள்.
உன்னித்து மற்று
ஒரு தெய்வம் தொழாள் அவனை அல்லால் - தன் நெஞ்சாலே மதித்து வேறு ஒரு தெய்வத்தைத் தொழுது
அறியாள் இவள். 2‘தொட்டில் பருவமே தொடங்கிப் பரம சினேகிதராய் இராநின்றார்’
என்கிறபடியே, பிறை தொழும் பருவத்திலும்
பிறை தொழுது அறியாள். 3‘முலையோ
முழுமுற்றும் போந்தில; பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே!’
என்று நீங்கள் ஆச்சரியப்படும்படி அன்றோ அவ்விளமைப்பருவத்திலும் இருந்தது? 4இனி,
‘இப்போது பர்வதத்தை விட்டுப் பதர்க்கூட்டத்தைப் பற்றுமோ? 5ஆகையாலே, இன்னார்க்கு
இன்னது பரிஹாரம் என்று ஒன்று இல்லையோ? அது அறிந்து பரிஹரிக்க வேண்டாவோ?
முழங்கால் தகர மூக்கிலே ஈரச்சீரை கட்டுமாறு போலேயன்றோ
நீங்கள் செய்கிற பரிஹாரம்? ‘வேறு தெய்வங்களின்
சம்பந்தம் இவளுக்குப் பொறாது,’ என்று அறிய வேண்டாவோ?’ என்கிறாள் என்றபடி. 6‘அநந்ய
தைவத்வம் - ‘வேறும் பற்றக்கூடிய
_____________________________________________________
1. முதலடியினையும் மூன்றாமடி நான்காமடியினையும்
கடாக்ஷித்து, அவதாரிகை
அருளிச்செய்கிறார். ஐகாந்தியம்
- தான் பற்றின விஷயத்தை ஒழிய
வேறொன்று அறியாதிருக்கை.
2. ஸ்ரீ ராமா. பால. 18 : 27.
‘இராநின்றார்’ என்றது, இளையபெருமாளை.
‘பிறை தொழும் பருவத்திலும்’ என்றது, திருமணம்
ஆவதற்கு முன்னேயுள்ள
கன்னிப்பருவத்தைக் குறித்தபடி. இப்பருவத்தில் பிறையைத் தொழுவது
என்பது
நூல் வழக்கு. அகப்பொருள் துறைகளில் ‘பிறை தொழுகென்றல்’
என்ற ஒரு துறையும் அமைந்துள்ளமை காண்க.
3. திருவிருத்தம், 60.
இது, இளமைப்பருவம் தொடங்கிப் பகவத் விஷயமல்லது
அறியாமைக்குப் பிரமாணம்.
4. ‘மலையோ திருவேங்கடம்’ என்றதனைக்
கடாக்ஷித்து ரசோக்தியாக
அருளிச்செய்கிறார், ‘இனி இப்போது’ என்று தொடங்கி.
5. ‘உன்னித்து மற்றொரு தெய்வம்
தொழாள்’ என்கிறவளுடைய
மனோபாவத்தைக் காட்டுகிறார், ‘ஆகையாலே’ என்று
தொடங்கி.
6. ‘மற்றொரு தெய்வம் தொழாள்’
என்றதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
‘அநந்ய தைவத்வம்’ என்று தொடங்கி. இது, பிராட்டியின்
வார்த்தை.
சுந்.
28 : 12. இச்சுலோகத்திற்கு ஆக்ஷேப சமாதானத்தோடு மிக விரிவாகப்
பொருள் அருளிச்செய்கிறார்
வியாக்கியாதா. அதனை, ‘வேறும் பற்றக்
கூடிய’ என்றது முதல் ‘என்றாள் பிராட்டி’ என்றது முடியக்
காண்க.
|