முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
245

வழுவாத ஆயிரத் துள்இவை
    பத்து வெறிகளும்
தொழுதுஆடிப் பாடவல் லார்துக்க
    சீலம் இலர்களே.

    பொ-ரை : ‘பரிசுத்தமான நீலமணி போன்ற நிறத்தையுடைய சர்வேசுவரனுக்குத் தொழுதும் ஆடியும் அடிமை செய்து நோய் தீர்ந்த, குற்றமில்லாத இயல்பான புகழையுடைய வளப்பம் பொருந்திய திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீசடகோபராலே சொல்லப்பட்ட குற்றம் இல்லாத ஆயிரம் திருப்பாசுரங்களுள் வெறியாட்டுச் சம்பந்தமான இவை பத்துப் பாசுரங்களையும் தொழுது ஆடிப்பாடுதற்கு வல்லவர்கள் துக்கத்தின் தன்மையும் இல்லாதவர்கள் ஆவார்கள்,’ என்றவாறு.

    வி-கு : ‘தொழுது ஆடித் தீர்ந்த சடகோபன்’ என்றும், ‘வழுவாத தொல்புகழையுடைய சடகோபன்’ என்றும் தனித்தனியே கூட்டுக. ‘பாட வல்லார் துக்கம் இலர்,’ என்க. சீலம் - தன்மை.

    ஈடு : முடிவில், 1‘இத்திருவாய்மொழியை மனப்பூர்வமாகக் கற்க வல்லவர்கள், தாம் பிரிந்து பட்ட துன்பம் படாமல் பலத்திலே சேர்வர்,’ என்கிறார்.

    தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த - இதற்கு, ‘மோஹித்தவள் சிறிது தெளிந்தவாறே, மோர்க்குழம்பு குடித்தாள், தரித்தாள், கண்விழித்தாள், வார்த்தை சொன்னாள்,’ என்பார்களே அன்றோ?’ அது போன்று காணும்,’ என்று அம்மங்கி அம்மாள் பணிப்பர். 2பின்பு பிறந்த மிகுந்த மயக்கத்தாலே பிறந்த உணர்த்தியைக் குவாலாகச் சொல்லுகிறது. மேல் ‘சீலம் இல்லாச் சிறியன்’ என்னும் திருவாய்மொழியாகையாலே, உணர்ந்து கூப்பிட வேண்டுமளவே பிறந்தது. 3இந்தத் தோழி தானும் அறிந்திலள்காணும் பகவானுடைய

_________________________________________________

1. பாசுரமுழுதினையும் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
  ‘தொழுதாடிப் பாட வல்லார்’ என்றதனை நோக்கி, ‘மனப்பூர்வமாகக் கற்க
  வல்லவர்கள்’ என்கிறார்.

2. ‘மயக்கம் நீங்கிய தன்மையைக் குவாலாகச் சொல்லுகிறது’ என்பது
  அம்மங்கியம்மாள் திருவுள்ளம். ‘‘தொழுதாடித் தூ மணி வண்ணனுக்கு
  ஆட்செய்து நோய் தீர்ந்த’ என்று, பாசுரம் தெளிவின் மிகுதியைக் கூறாநிற்க,
  ‘சிறிது தெளிந்தமையைக் குவாலாகச் சொல்லுகிறது’ என்று அம்மங்கி
  அம்மாள்
நிர்வஹிப்பதற்குக் காரணம் யாது?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், மேல் ‘சீலமில்லா’ என்று தொடங்கி.

3. ‘ஏத்துமின்’ என்றதன் பின்னர், அவர்கள் ஏத்தாதிருக்கவும் இப்பாசுரத்தில்
  ‘தொழுதாடி’ என்கையாலே, பலித்த அர்த்தத்தை அருளிச்செய்கிறார், ‘இந்தத்
  தோழிதானும்’ என்று தொடங்கி.