முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
25

ஒரு சமயத்தைப்பெற்று, என்னால் கொடுக்கப்பட்டதான இந்த ஆலிங்கனமானது எல்லாக் கொடைக்கும் சமானமாகக் கடவது என்று 1கொடுக்கும்படி அன்றோ? நம் மாயவன் - அடியார்கள் விஷயத்தில் அவன் இருக்கும்படி எல்லை காணப்போமோ? ‘இப்பேற்றுக்குச் செய்ய வேண்டுவது என்?’ எனில், பேர் சொல்லி வாழ்மினோ - செய்ய வேண்டிய முயற்சி இவ்வளவே; பின்னை வாழ்வோடே தலைக்கட்டும். 2வாழ்க்கைக்கு ஒரு பேரோ! ‘அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்னும்படி அன்றோ இதுதன்னுடைய இனிமை இருப்பது?

(5)

338

        1வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை
            மொக்குளின் மாய்ந்துமாய்ந்து
        ஆழ்ந்தார்என்று அல்லால், அன்றுமுதல்
            இன்று அறுதியா

_____________________________________________________

1. கொடுக்கும்படி - கொடுக்கக் கூடிய சரீரம்.

2. ‘பேர் சொல்லி வாழ்மினோ’ என்பதற்கு மேலே உபாய பரமாகப் பொருள்
  அருளிச்செய்தார். பேர் சொல்லுகைதானே வாழ்ச்சியாய் இருக்கும் என்று
  உபேய பரமாகப் பொருள் அருளிச்செய்கிறார், ‘வாழ்க்கைக்கு ஒரு பேரோ!’
  என்று தொடங்கி. ‘அச்சுவை பெறினும்’ என்ற இது, திருமாலை 2-ஆம்
  பாசுரம். என்றது, ‘வாழ்வு என்று வேறு ஒன்று வேண்டுமோ? ‘எனக்கு
  என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திருநாமம்’ என்கிறபடியே.
  ‘திருநாமத்தைச் சொல்லுகைதானே போக்கியமாய் இருக்குமே அன்றோ?’
  என்றபடி.