முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
252

New Page 1

பெருமாளைப் பிரிந்த ஆற்றாமையாலே கூப்பிட, ஸ்ரீ சுமந்திரன், ‘அவரைப் பிரிந்தோம் என்று கூப்பிட வேண்டாகாணும்; தாமே வந்து புகுவர்காணும்,’ என்று தேற்றினான். சூதேந - சொன்ன வார்த்தை ‘நம்பத்தகுந்தது’ என்று கைக்கொள்ள வேண்டும்படி அந்தரங்கன் ஆவது, சாரதிகள் சொல்லுவனவெல்லாம் நம்பத்தக்கன அன்றோ? சுயுக்தவாதிநா - அஃது இல்லையேயாகிலும் வார்த்தையைக் கேட்டால், ‘இது அப்படியே’ என்று நம்பி ஓடுகிற சோகம் தீரும்படி வார்த்தை சொல்ல வல்லன் ஆவது. நிவார்யமாணா -இவனாலே ‘இது வேண்டா’ என்று தடுக்கப்படாநிற்கச்செய்தேயும். சுதசோக கர்சிதா - இப்படி 1இவனைப் போரப் பொலியச் சொல்லுங்காட்டில் நீங்காதே அன்றோ, இவள் பிரிந்த விஷயத்தில் ஆற்றாமை? நெடு நாள் கூடிப்பெற்ற பிள்ளையைப் பிரிந்தால் தரிக்கப் போகாதே! நசைவ தேவீவிரராம கூஜிதாத் - பிறர் கண்ணீரையும் மாற்றி, இதற்கு முன்பு சோகமும் புதியது உண்ணாதே போந்தவள், கூப்பிடுகிற கூப்பீட்டினின்றும் ஓவிற்றிலள்; கூப்பிடுகிற போதுதான் கேட்டார்க்கு அடைய இரக்கம் பிறக்கும்படி குயில் கூவினாற்போலேகாணும் கூப்பிடுவது. கூப்பிட்ட பாசுரம், பிரியேதி புத்ரேதிச ராகவேதிச - ‘பிரிந்தால் தரிக்க ஒண்ணாதபடி எனக்கு இனியவரே! உம்மைப் பிரிந்தாருடைய ஆற்றாமையை நீக்கும் தன்மையையுடையவரே! எல்லாரையும் பாதுகாக்கும் குடியிலே பிறந்து, பெற்ற தாயை நலியலாமோ!’ என்று அவள் கூப்பிட்டாற்போலே இவரும் கூப்பிடுகிறார்.

399

சீலம் இல்லாச் சிறியே னேலும்,
    செய்வினை யோபெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி!
    நாராயணா! என்றுஎன்று
காலந் தோறும் யான்இ ருந்து,
    கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்;
    கூவியும் கொள்ளாயே.

    பொ-ரை : ‘உலகத்தை எல்லாம் உண்டவனே! ஞானத்தையே வடிவாக உடையவனே! நாராயணனே!’ என்று என்று யான் இங்கே

_______________________________________________

1. இவனை - சுமந்திரனை.