|
New Page 1
‘காலந்தோறும்
யான் இருந்து கைதலை பூசல் இட்டால் கோல மேனி காண வருகின்றிலை; கூவியும் கொள்ளுகின்றிலை;
இதற்குக் காரணம், சீலமில்லாச் சிறியனேலும் செய்வினையோ பெரிதால்,’ எனக் கூட்டுக. ‘நாராயணன்’
என்கையாலே, இறை நிலை சொல்லிற்று; ‘சிறியன்’ என்கையாலே, உயிர்நிலை சொல்லிற்று;
‘வாராய்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று; ‘காண’ என்கையாலே, பலம்
சொல்லிற்று; ‘செய்வினையோ பெரிதால்’ என்கையாலே, விரோதி சொல்லிற்று; ஆக, ஐந்து
பொருள்களும் இத்திருப்பாசுரத்திலே சொல்லப்பட்டன.
(1)
400
‘கொள்ள மாளா இன்ப வெள்ளம்
கோதுஇல தந்திடும்என்
வள்ள லேயோ! வையம்
கொண்ட
வாமனாவோ!’
என்றுஎன்று
நள்இ ராவும் நன்பகலும்
நான்இருந்து,
ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை
என்கண்
காணவந்து
ஈயாயே.
பொ-ரை :
‘பூவுலகை அளந்துகொண்ட வாமனனே! குற்றம் இல்லாதனவும் அனுபவிக்க அனுபவிக்கக் குறைவுபடாதனவுமான
ஆனந்தக்கடலைக் கொடுக்கின்ற வள்ளலே!’ என்று என்று நள் இராவும் நன்பகலும் நான் இருந்து அழைத்தால்,
கள்ள மாயனே! உன்னை என் கண்கள் காணும்படியாக நடந்து வந்து திருவருள் புரிதல் வேண்டும் என்கிறார்,’
என்றவாறு.
வி-கு :
‘கோதில’ என்பது, இன்பத்திற்கு அடைமொழி. ‘கோதில்லாதனவும் கொள்ள மாளாதனவுமான இன்பம்’
என்க. கோது - குற்றம். நல் - செறிவு. ‘வந்து ஈயாய்’ என்க. ‘ஈயாய்’ என்பது விதி வினை;
‘ஈதல் வேண்டும்’ என்பது பொருள். இனி, இதனை மறைவினையாகக் கொண்டு, ‘ஈகின்றிலை,
கொடுக்கின்றிலை’ என்னலுமாம். ஓகாரங்கள் துக்கத்தின் மிகுதியைக் காட்ட வந்தன.
ஈடு :
இரண்டாம் பாட்டு, 1‘முன்பு செய்த உபகாரங்களைச் சொல்லி, அப்படி உபகரித்து உன்
இனிமையை
_____________________________________________________
1.
‘கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதில தந்திடும்’ என்றதனைக்
கடாக்ஷித்து, ‘முன்பு செய்த உபகாரங்களைச்
சொல்லி’ என்றும், ‘ஈயாய்’
என்றதனைக் கடாக்ஷித்து, ‘எழ வாங்கியிருத்தல் போருமோ?’ என்றும்
அருளிச்செய்கிறார். எழ வாங்கி - தூரப்போய்.
|