முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
263

இந

இந்திரனைக் கண்ணநீரை மாற்றுகைக்காக, திருமகள் கேள்வனான தன்னை இரப்பாளன் ஆக்கினானே அன்றோ? என்றது, ‘நீ இரந்து தருகை ஒழிய நான் இரந்து கூப்பிட இருப்பதே இப்போது!’ என்கிறார் என்றபடி.

    என்று என்று - 1இந்திரனைப் போன்று இராச்சியம் பெற்றுப் போகிறார் அல்லர், மஹாபலியைப் போலே ஒளதார்யம் கொண்டாடிப் போகின்றார் அல்லர், எப்போதும் இதனையே சொல்லி. 2வையங்கொண்ட பின்பும் வாமன வேஷமாயிற்று இவர் திருவுள்ளத்தில் ஊற்று இருந்தது; ஆதலின், ‘வையம் கொண்ட வாமனா!’ என்கிறார். நள் இராவும் - ‘நள்’ என்று நடுவாதல்; செறிவாதல்; இரவில் மற்றைய பொருள்களின் ஒலி மாறினால் வருவதொரு ஒலியுண்டு, அந்த ஒலியாதல். எல்லாவற்றாலும் பலித்த பொருள், ‘நடு இரவு’ என்பது, 3‘இந்தப் பூதங்கள் தூங்குகிற காலத்தில் எவன் விழித்துக்கொண்டு இருக்கிறானோ’ என்கிறபடியே, ‘நீ உணர்ந்து கூப்பிடும்படி செய்வதே!’ என்பார், ‘நள்ளிராவும்’ என்கிறார். நன்பகலும் - ‘தீர்ப்பாரை யாம் இனி’ என்ற திருவாய்மொழியோடு வேற்றுமை அற, பகவானுடைய சம்பந்தம் மாறாதே போருகையாலே ‘நன்பகல்’ என்கிறார்.

    அன்றிக்கே, 4புறம்பு ஒரு விஷயத்தை அனுபவித்தால், காணாத போது மறந்து வேறு ஒன்றிலேயும் நெஞ்சை வைக்கலாம்படி இருக்குமே அன்றோ? அவனைக் காணப் பெறாமையாலே பாழ் அடைந்த காலம் ஆகையாலே, செவ்வாய்க் கிழமையை மங்களவாரம் என்னுமாறு

_____________________________________________________

1. ‘என்று என்று’ என்ற அடுக்குத்தொடருக்கு பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘இந்திரனைப் போன்று’ என்று தொடங்கி. இதனையே - வாமன
  அவதாரத்தையே.

2. ‘வையங்கொண்ட திரிவிக்கிரமன் என்னாது, ‘வாமனா!’ என்கிறது என்?’
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘வையங்கொண்ட பின்பும்’ என்று
  தொடங்கி.

3. கடவல்லி உப.  2 : 5.

4. ‘பிரிவு காலத்திலும் பகவத் சம்பந்தம் மாறாதே இருக்குமோ?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘புறம்பு ஒரு விஷயம்’ என்று தொடங்கி.
  ‘இருக்குமேயன்றோ?’ என்றது, ‘அப்படி அன்றிக்கே, இந்த விஷயம் பிரிவு
  காலத்திலும் மறக்கப் போகாது,’ என்றபடி.