முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
265

அங

அங்ஙனம் கொள்ளுமிடத்துச் ‘செய்வினையோ பெரிதால்’ என்ற மேல் பாசுரத்தோடே கூட்டுக. 

(2)

401

ஈவுஇ லாத தீவினைகள் எத்தனை செய்த னன்கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்றுஎன்று,
கூவிக் கூவி நெஞ்சுஉருகி, கண்பனி சோர நின்றால்,
பாவி நீஎன்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.

    பொ-ரை : ‘அழியக் கூடியன அல்லாத பாவங்கள் எத்தனை செய்தேனோ அறியேன்! பூலோகத்தை அளந்துகொண்ட எந்தையே! தாமோதரனே!’ என்று என்று கூவிக்கூவி நெஞ்சம் உருகிக் கண்களிலே நீர் சோரும்படி நின்றால், பாவியேன் காணும்படி முன்னே வந்து ‘நீ பாவி’ என்றாகிலும் ஒரு வார்த்தை சொல்லுகின்றாய் இல்லையே!’ என்கிறார்.

    வி-கு : ‘ஈ’ என்பது, ‘வீ’ என்ற சொல்லின் விகாரம்; தழல் - அழல், மலர் - அலர் என்பன போன்று வந்தது. வீ - அழிவு. ‘ஈபாவம் செய்து’ என்றார் முன்னரும். (திருவாய். 2. 2 : 2) சொல்லாய் என்பது, விதி மறை இரண்டற்கும் பொதுவான முற்று. சொல்லுவாய் என்ற பொருளில் விதி; சொல்லமாட்டாய் என்ற பொருளில் மறை. ‘காண வந்து ஒன்று சொல்லாய்; ஆதலால், பாவியேன் ஈவிலாத தீவினைகள் எத்தனை செய்தனன்கொல்’ என்க.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1எனக்கு உன்னைக் காட்டாதொழிந்தால், ‘நீ என்னைப் பார்ப்பதற்கு நல்வினை செய்தாய் இல்லை,’ என்றாகிலும் என் கண்முன்னே வந்து ஒரு வார்த்தை சொல்லுகின்றிலை,’ என்கிறார்.

    ஈவு இலாத தீவினைகள் எத்தனை செய்தனன்கொல் - 2நான்தான் பெரிய பாவத்தைப் பண்ணுகிறேன்; அனுபவித்தாலும் மாளாதபடியான பாவத்தைச் செய்ய வேண்டுமோ? 3‘கர்மங்கள் அவசியம் அனுபவித்தே தீர்க்க

_____________________________________________________

1. ‘பாவியேன் காண வந்து, ‘பாவி நீ’ என்று ஒன்று சொல்லாய்’ என்றதிலே
  நோக்காக அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘செய்வினையோ பெரிதால்’ என்றதனைக் கடாக்ஷித்து, ‘நான் தான்’ என்று
  தொடங்கி அருளிச்செய்கிறார்.

3. ‘அனுபவித்தால் கர்மங்கள் மாளுமோ?’ என்ன, ‘மாளும்’ என்பதற்குப்
  பிரமாணம் காட்டுகிறார், ‘கர்மங்கள்’ என்று தொடங்கி. ‘அனுபவிக்கப்படாத
  கர்மங்கள் நாசம் அடையா,’ என்றதனானே, ‘அனுபவித்தால் நாசம்
  அடையும்’ என்பது தானே போதருமன்றோ? ஆகையால், ‘அனுபவித்தால்
  நாசமடையும் என்னுமதுவும் என்னளவில் பொய்யோ?’ என்கிறார், பொய்யான
  பிரகாரத்தைக் காட்டுகிறார், ‘அனுபவித்தாலும்’ என்று தொடங்கி.